Published:Updated:

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: டி.ஜி.பி‌ தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; 26 சாட்சிகளிடம் விசாரணை!

ஆலோசனைக் கூட்டம்
News
ஆலோசனைக் கூட்டம்

மேல் குன்னூர் காவல் நிலையத்தில் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்கக் கூடுதல் எஸ்.பி முத்து மாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய கோர விபத்தான குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உடல் கருகிய நிலையில் கொடூரமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் கடுமையான தீக்காயங்களுடன் உயிர்தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

இந்த விபத்து தொடர்பாக புலன் விசாரணை மற்றும் விபத்தின் காரணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி, நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், தடய அறிவியல் நிபுணர்கள், விசாரணை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ``தடயவியல் இயக்குநரின் அறிவுரைகள், ஆலோசனைகள் பெறப்பட்டன. மேலும், இந்த விபத்து தொடர்பாக மேல் குன்னூர் காவல் நிலையத்தில் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்கக் கூடுதல் எஸ்.பி முத்து மாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து

இந்த வழக்கில் இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அறிந்தவுடன், முதலாவதாகச் சென்று தீக்காயங்களுடன் போராடிய அதிகாரிகளை விரைவாக மீட்ட காவலர்களுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.