Published:Updated:

குன்னூர்: `8 பேருக்குத்தான் வரையத் தெரியும்!’- குறும்பர் ஓவியங்களை மீட்டெடுக்க புதிய முயற்சி

குறும்பர் ஓவியம்
குறும்பர் ஓவியம்

``எங்களோட‌ அடையாளமா இருக்கும் இந்த ஓவியத்தை வரைய‌ இப்போதைக்கு 8 பேர்தான் இருக்கோம். குன்னூர் டவுன்ல வரைய‌க் கூப்பிட்டாங்க. எங்களோட‌ வாழிடம், மரம், தேன் சேகரிப்பு, திருவிழா ‌எல்லாத்தையும் வரையுறோம்’’.

நீலகிரியில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர், பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் என இந்த 6 வகை பழங்குடி மக்கள் இன்றளவும் இயன்றவரை தங்களின் பாரம்பர்யங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

குறும்பர் ஓவியம்
குறும்பர் ஓவியம்

ஒவ்வொரு வகை பழங்குடியினரும் தங்களுக்கென சில உணவு முறைகள், ஆடைகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றையும்‌ கொண்டுள்ளனர்.

அதேபோல், ஆயர் தொழிலில் தோடர்கள் சிறந்து விளங்குகின்றனர். கலை வேலைப்பாடுகளில் கோத்தர் பழங்குடிகள் கைத்தேர்ந்தவர்கள். இந்த வரிசையில் ஆதிகாலம் தொட்டு ஓவியம் வரைவதில் நிபுணத்துவும் பெற்றவர்களாக குறும்பர்கள் உள்ளனர்.

குறும்பர் ஓவியம்
குறும்பர் ஓவியம்

எழுத்துரு தோன்றுவதற்கு முன்பே வாழ்வியலை ஓவியமாக குகைகளிலிலும், பாறைகளிலிலும் வரையத் துவங்கியவர்கள்‌ குறும்பர்கள். மலைத் தொடர்கள், மரங்கள், அருவிகள், காட்டுயிர்கள், வேட்டை, கொண்டாட்டம், துக்கம் போன்றவற்றை இயற்கையில் கிடைக்கும் வண்ணங்களை உருவாக்கி ஓவியமாக வரைந்துள்ளனர்.

ஒரு தேக்கு இலை... ஓர் ஓவியம்... மாதம் 50 ஆயிரம் வருமானம்! கலக்கும் நம்பிக்கை மனிதர் தீபன்

மிகவும் தனித்துவம்‌ வாய்ந்த கோட்டோவியங்களைப் போன்ற ஓவிய‌ முறையைப் பின்பற்றி வந்த, இந்தக்கலை அழியும் நிலையில் உள்ளது. சொற்ப அளிவிலானவர்களே இந்தக் கலையை தற்போது அறிந்துள்ளனர்.

குறும்பர் ஓவியம்
குறும்பர் ஓவியம்

பாரம்பர்யமிக்க இந்த ஓவியத்தை அழியாமல் பாதுகாக்க அரசும், ஆர்வலர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆலு குறும்பர் பழங்குடிகளைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இந்த ஓவியம் குறித்து நம்மிடம் பேசிய பழங்குடி மணி ``எங்களோட‌ அடையாளமா இருக்கும் இந்த ஓவியத்தை வரைய‌ இப்போதைக்கு 8 பேர்தான் இருக்கோம். குன்னூர் டவுன்ல வரைய‌க் கூப்பிட்டாங்க. எங்களோட‌ வாழிடம், மரம், தேன் சேகரிப்பு, திருவிழா ‌எல்லாத்தையும் வரையுறோம். இப்போ புதுசா எங்க ஓவியத்தைக் கத்துக்கிட்ட‌ சின்ன‌ பையனையும்‌ கூட்டிட்டு வந்துருக்கோம்" என்றார்.

குறும்பர் ஓவியம்
குறும்பர் ஓவியம்

இதுகுறித்து குன்னூர் நகராட்சி அதிகாரிகள் பேசுகையில், ``ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையத்தைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தநிலையில் பேருந்துநிலையத் தூண்களில் இவர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைய ஏற்பாடு செய்து, அவர்களைக் கொண்டே வரையும் பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. ஓவியங்கள் சிறப்பாக வந்துள்ளன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு