Published:Updated:

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து - உயிர் தப்பிய ஊழியர்கள்!

கார்டைட் ஃபேக்டரி

ஆபத்தை உணர்ந்த தொழிற்சாலை நிர்வாகம் அபாய சைரனை அழுத்தி தொழிலாளர்களை உஷார்படுத்தி வெளியேற்றினர். சி.டி பிரிவில் வெடி விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அரவங்காடு பகுதியில் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கிவருகிறது. நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டுவரும் இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்துக்கான வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கார்டைட்டை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கிவரும் இந்தத் தொழிற்சாலையில் 1,000-க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கார்டைட் ஃபேக்டரி மருத்துவமனை
கார்டைட் ஃபேக்டரி மருத்துவமனை

இந்த நிலையில், வெடிமருந்துகளைக் கையாளும் சி.டி பிரிவு எனப்படும் கார்டைட் டிவிஷனில் இன்று காலை 8:30 மணி வாக்கில் பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணர்ந்த தொழிற்சாலை நிர்வாகம், அபாய சைரனை அழுத்தி தொழிலாளர்களை உஷார்படுத்தி வெளியேற்றியது. சி.டி பிரிவில் வெடி விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

ஊழியர்கள்
ஊழியர்கள்

அதிகச் சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தால் இவர்களின் காதுகள்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சிறப்பு பரிசோதனை செய்துவருகின்றனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து பாதுகாப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.