Published:Updated:

`பயிரிட்ட நிலத்திலே அழுகும் தர்பூசணிகள்!’ - ஊரடங்கால் கலங்கும் விவசாயிகள்

தர்பூசணி
தர்பூசணி

தர்பூசணி அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பழங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் தர்பூசணி விவசாயிகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தர்பூசணி
தர்பூசணி

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர், சோதியக்குடி, கீரங்குடி, சிதம்பரநாதபுரம், சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுப்படுகை, சந்தப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு, அளக்குடி, முதலைமேடுதிட்டு, அனுமந்தபுரம், நாதல்படுகை ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள கிராமங்களில் விவசாயிகள் சுமார் 400 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர்.

தர்பூசணி பயிர்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டீசல் இன்ஜின் மற்றும் மின்மோட்டாரைப் பயன்படுத்தி நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்திருந்தனர். இந்த நிலையில், அனைத்து தர்பூசணி சாகுபடியும் அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பழங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. வியாபாரிகள் வந்து வாங்குவதும், விவசாயிகள் வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதும் சிக்கலாகிவிட்டது.

கொரோனா
கொரோனா

இதனால் அனைத்து நிலங்களிலும் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி பழுத்து அழுகி எந்தப் பயனுமின்றி வயலிலேயே வீணாகிக் கிடக்கிறது. இதனால் தர்பூசணி பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் வேதனையடைந்துள்ளனர்.

இது குறித்து மாதிரவேளூரைச் சேர்ந்த தர்பூசணி விவசாயி வசந்தி முருகேசன் கூறுகையில், ``நான் மாதிரவேளூரில் எனக்குச் சொந்தமான 5 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்தேன். ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 வீதம் ஒரு லட்சம் வரை செலவு செய்துள்ளேன். முறையாக அறுவடை செய்து விற்பனை செய்திருந்தால் எனக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்திருக்கும். ஆனால், கொரோனா ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் வயலிலேயே என் கண்ணெதிரிலேயே அழுகி வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு