Published:Updated:

`தஞ்சாவூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று; மூடப்பட்ட தெரு! -தனிமைப்படுத்தபட்ட உறவினர்கள்

கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள்
கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை.மேலும் 26 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கிந்திய தீவிலிருந்து வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் இருந்த உறவினர்கள் அவரை சந்தித்த நபர்களும் என அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அவர் வீடருகே வசிப்பவர்களையும் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணம்
கும்பகோணம்

கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது ஆண் தொடர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொண்டை, சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்தநபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை. மேலும் 26 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர் மேற்கிந்திய தீவில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக மேற்கிந்திய தீவில் இருந்து கடந்த 16 -ம் தேதி புறப்பட்டு, கத்தார் வழியாக கும்பகோணத்திற்கு 18 -ம் தேதி வந்துள்ளார்

கொரோனா
கொரோனா

இதையடுத்து அவருக்கு மார்ச் 22 -ம் தேதி சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மார்ச் 25 -ம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனாவுக்கான பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதை அடுத்து, அவருடன் இருந்த உறவினர்கள் அவரை சந்தித்த நபர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அவர் வசித்து வரும் தெருவில் உள்ளவர்களையும் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி நபர்கள் இவர் வீடு அமைந்துள்ள பகுதிக்கு செல்ல முடியாத வகையில் தெரு முனைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். இது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு