Published:Updated:

``கொரோனா அச்சம்; வீட்டுக்குள் அனுமதிக்காத ஓனர்?" - 5 மணி நேரம் தெருவில் கிடந்த தொழிலாளியின் சடலம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னை ஜாபர்கான்பேட்டையில் கொரோனா அச்சம் காரணமாக கூலித்தொழிலாளியை ஹவுஸ் ஓனர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவர் தெருவிலேயே இறந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ளனர். அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக விலகலை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

``அருகில் வந்தால் கட்டிப்பிடிப்பேன்"-போலீஸை மிரட்டிய சென்னை ஜி ஹெச்-சிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் ரவி இறந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இந்தச் சமயத்தில் நீண்ட நேரமாக ஒருவர், அசைவற்று கிடப்பதைப் பார்த்த சிலர், குமரன்நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இன்று காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் `இதுவரை 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 3,65,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 3,54,25,999 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது காவல் துறையினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குடியிருந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் கொரோனா தொற்று பரவியதையடுத்து அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் குடியிருந்தவர் ரவி (53). இவருக்கு திருமணமாகவில்லை. சகோதரி வீட்டில் தங்கியிருந்த ரவி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தார். கடந்த சில தினங்களாக ரவி, இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து ரவியை வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வீட்டு உரிமையாளர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் ரவியை அவரின் சகோதரி வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

`திருமணமான அன்றே சுயரூபம் தெரிந்துவிட்டது..' - சென்னைக் காவலரால் விபரீத முடிவெடுத்த மனைவி
சென்னை சென்ட்ரல் நிலையம்
சென்னை சென்ட்ரல் நிலையம்

அதனால் தங்கியிருக்க வீடு இல்லாத ரவி, ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள தெருவில் தங்கியிருந்தார். காய்ச்சல் அதிகமானதால் கொரோனா பயம் காரணமாக சென்னை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையிலிருந்து ஜாபர்கான்பேட்டை பகுதிக்குத் திரும்பி வந்தார். சகோதரி வீட்டில் தங்கயிருக்க அனுமதியில்லாததால் ஆள்நடமாட்டம் இல்லாத தெருவில் படுத்து உறங்கினார். நள்ளிரவில் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட ரவியின் உயிர் பிரிந்தது.

ஆனால், ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் ரவி இறந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இந்தச் சமயத்தில் நீண்ட நேரமாக ஒருவர், அசைவற்று கிடப்பதைப் பார்த்த சிலர், குமரன்நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ரவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ரவிக்குக் கொரோனா தொற்று இல்லை எனபதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனால் நிம்மதியடைந்த போலீஸாரும் ரவியின் உறவினர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

ரவி இறந்து கிடந்த தெரு
ரவி இறந்து கிடந்த தெரு

கொரோனா அச்சம் காரணமாக ரவியின் சடலத்தின் அருகே முதலில் யாரும் செல்லவில்லை. போலீஸாரும் முன்னெச்சரிக்கையாகத்தான் ரவியின் சடலத்தை மீட்டனர். ரவி இறந்த தகவல் தெரிந்ததும் அவரின் குடும்பத்தினர் அங்கு வந்தனர். எதற்காக ரவி வீட்டில் தங்காமல் தெருவில் படுத்திருந்தார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். உண்மையிலேயே கொரோனா பீதி காரணமாக ரவியை அவர் தங்கியிருந்த ஹவுஸ் ஓனர் துரத்தினாரா என்றும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். உறவினர்கள் இருந்தும் கொரோனா பீதி காரணமாக தெருவில் இறந்த ரவியின் சடலம் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் அநாதையாகக் கிடந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு