Published:Updated:

கேரள மாணவர்கள் தினசரி வந்து செல்வதற்குத் தடை!-கோவை மாவட்டத்துக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோவை
கோவை

கொரோனா வைரஸ் பரவிவருவதால் கோவை மாவட்டத்துக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, நாளை செப்டம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
கோவை: விபத்தில் சேதமடைந்த போலீஸ் வேன்... 40 ஆண்டுகளுக்குப் பிறகு வின்டேஜ் லுக்குடன் மறுபிறப்பு!

`கோவை மாநகராட்சி, அதன் நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் நகைக் கடைகள், துணிக்கடைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை இயங்குவதற்குத் தடைவிதிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ராமர் வீதி, சாரமேடு, ரைஸ்மில் சாலை, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஹோப் காலேஜ், காளப்பட்டி, டி.பி.ரோடு, சரவணம்பட்டி , கணபதி பேருந்து நிலையம், காந்திமா நகர், ஆவாரம்பாளையம், ராஜவீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி,

கோவை ஊரடங்கு
கோவை ஊரடங்கு

தாமஸ் வீதி, சுக்ரவார் பேட்டை, கடைவீதி, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசியக் கடைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கடைகளும் இயங்கத் தடைவிதிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூங்காக்கள், மால்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை இயங்கத் தடைவிதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்கள், அடுமனைகள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் 50 சதவிகித வாடிக்கையளர்களுடன் சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.

கோவை
கோவை

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 9 ,10 ,11, 12-ம் வகுப்புகள், கல்லூரி வகுப்புகள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்க அனுமதிக்கப்படும்.

அதேநேரத்தில், கேரளாவிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவியர் தினசரி வந்து செல்வதற்கு அனுமதி இல்லை. பள்ளி, கல்லூரி மாணவிகளும், அனைத்து விடுதிகளிலும் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
கோப்புப் படம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், அங்கிருந்து வரும் மாணவ, மாணவிகள் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன், ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் எகிறும் பாதிப்புகள்; தமிழகத்தில் கொரோனா இப்போது, இனி..?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு