Published:Updated:

`மாற்றுத்திறனாளிகளுக்கு #Corona பாதுகாப்பு கிட்; விலையில்லா மருந்துகள்!’ - அசத்தும் தேனி

corona
corona

கொரோனா ஊரடங்கு காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் பொறுட்டு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விலையில்லா மருந்துகள் வழங்கும் திட்டம் தேனி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக தவழும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், அவர்கள் வசிக்கும் இடங்களில், அவர்களைப் பாதுகாத்திடும் நோக்கோடு புதிய திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

`சோதனைக்காக வாகனத்தை நிறுத்திய போலீஸார்; பேரிகார்டில் முட்டிக்கொண்ட இளைஞர்!’- தேனி அதிர்ச்சி
corona virus
corona virus

அவர்களுக்குக் கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் ஆகியவையும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி டிஸ்யூபேப்பர் ஆகியவை அடங்கிய தொகுப்பு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, மாவட்டத்தில் உள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கு இவை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறும் போது, ``ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனங்கள் மூலம், மாவட்டத்தில் கண்டறியப்படுள்ள தவழும் மற்றும் இதர அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குக் களப்பணியாளர்கள் மூலம், இந்தக் கொரோனா பாதுகாப்புக் கிட் கொடுக்கப்படும். இதைச் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்” என்றனர்.

கொரோனா பாதுகாப்பு கிட்களை வழங்கும் தேனி கலெக்டர்
கொரோனா பாதுகாப்பு கிட்களை வழங்கும் தேனி கலெக்டர்
குளிக்கச் சென்ற இளைஞர்கள்... உறை கிணற்றில் பச்சிளம் குழந்தை! -தேனி அதிர்ச்சி

இது ஒருபுறம் என்றால், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை, வீட்டில் இருந்தே பெற, 18004520111 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்துக் கேட்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்திற்கான மருத்துவரின் சீட்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இவை இருந்தால் போதுமானது எனவும், ரூ.1,800 வரை, மருந்துகளை இலவசமாகப் பெற முடியும். வீடுகளுக்கே மருந்துகள் கொண்டு வந்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு