Published:Updated:

சேலம்: சாலை ஓரத்தில் சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்?! - பொதுமக்கள் அதிர்ச்சி

பரிசோதனை மாதிரிகள்
பரிசோதனை மாதிரிகள்

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணைக்கும் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. கொரோனா தாகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. கொரோனா உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தச் சூழலில் சேலம் டு ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி என்ற இடத்தில் கொரோனா பரிசோதனைக்காக பயன்படுத்தப்படுவது போன்ற மாதிரிகள் அடங்கிய டெஸ்ட் டியூப் கருவிகள் சாதாரணமாகச் சிதறிக்கிடக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா ஆய்வு
கொரோனா ஆய்வு

கொரோனா டெஸ்ட் எடுக்கும்போது முகம் முழுவதும் மூடிக்கொண்டு, கைகளில் பிளாஸ்டிக் கவர்கள் அணிந்துகொண்டு, கண்ணாடித் துளைகளின் வழியாக கைகளைவிட்டு மூக்கு, தொண்டைகளில் மாதிரிகளை எடுக்கிறார்கள்.

எடுக்கப்பட்ட மாதிரிகளை நோயாளிகளிடமே கொடுத்து கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கச் சொல்லுகிறார்கள். இவ்வளவு பாதுகாப்பாக டெஸ்ட் எடுக்கப்படுகிறது. ஆனால் இப்படி பாதுகாப்பாக எடுக்கப்பட்ட மாதிரிகள் சாலையின் ஓரத்தில் கிடப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வழியாகச் செல்பவர்கள் அந்த மாதிரிகளைப் பார்த்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற இந்த சூழலில், சேலம் டு ஆத்தூர் செல்லும் சாலையில் கொத்தாம்பாடி அருகே,...

Posted by Junior Vikatan on Friday, October 2, 2020

சாலையோரமாக நின்று அந்த மாதிரிகளை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக் என்பவர், ``கொரோனா தொற்றுக்கு அனைவரும் பயந்துகொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், கொரோனா டெஸ்ட் மாதிரிகளை இப்படிப் பொறுப்பில்லாமல் யாரோ போட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் இதைக் கையிலெடுத்தால் அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதாக இருக்கும். இப்படிப் பொறுப்பற்று சாலையில் வீசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கொரோனா உபகரணம்
கொரோனா உபகரணம்

இது பற்றி சேலம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் நிர்மல்சனிடம் பேசினோம். ``கொரோனா பரிசோதனை மாதிரிகள் வெளியில் கிடப்பதற்கு வாய்ப்பில்லை. அதைப் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் உடனே விசாரித்து அப்புறப்படுத்தச் சொல்கிறேன்’’ என்றார். தொடர்ந்து அந்த மாதிரிகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணைக்கும் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்ச்த சம்பவம் இன்று கொத்தாம்பாடிப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு