Published:Updated:

`4 ரகங்கள்; 5,000 மலர்த் தொட்டிகள்!’ - ஊட்டி பூங்காவில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட கொரோனா வைரஸ்

flower pot arrangement
flower pot arrangement

தாஜ்மகால் முதல் மலை ரயில் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வந்த தாவரவியல் பூங்காவில் இன்றைக்கு கொரோனா வைரஸ் வடிவமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சார்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த ஊட்டியில் ஏப்ரல், மே ஆகிய இந்த இரண்டு மாதங்களும் கோடை கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும். கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கவும் லட்சக்கணக்கில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களையும், குளிர்ந்த காலநிலையையும் அனுபவிக்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவர்.

flower pot arrangement
flower pot arrangement

கொரோனா பரவலைத் தடுக்க சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு, கோடை விழா நடத்தப்படுவதும் ஏறக்குறைய ரத்தாகியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு சுற்றுலாவை நம்பியிருந்த ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிவழியும் ஊட்டி நகரின் சாலைகளும் கடை வீதிகளும் இன்றைக்கு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வாகனகங்கள் ஓடாத சாலைகளில் ஆங்காங்கே கொரோன குறித்த விழிப்புணரவு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

flower pot arrangement
flower pot arrangement

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர்த் தொட்டிகளைக்கொண்டு கொரோனா வைரஸ் மாதிரி வடிவம் வடிமைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பூங்கா ஊழியர்கள் மூன்று நாள்களாகப் பணியாற்றி இந்த வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "லட்சக்கணக்கான மலர்களைக்கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். தற்போது மக்கள் கொரோனா பாதிப்பில் தவிக்கும் நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மலர்களால் கொரோனா வைரஸ் வடிவம் உருவாக்கத் திட்டமிட்டோம்.

flower pot arrangement
flower pot arrangement

சால்வியா, மேரிகோல்டு உள்ளிட்ட 4 ரகங்களில் 8 வண்ணங்களில் சுமார் 5,000 மலர்த் தொட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்கி உள்ளோம். இதைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் புகைப்படங்களைப் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு