Published:Updated:

குஜராத் டு தேனி; கோயம்பேடு டிராவல் ஹிஸ்ட்ரி! - கண்காணிப்பில் கோட்டைவிடுகிறதா தேனி?

தேவதானப்பட்டி தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
தேவதானப்பட்டி தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

வெளி மாவட்ட, வெளி மாநில டிராவல் ஹிஸ்ட்ரியால் தேனியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால், தேனி மக்கள் நிம்மதியிழந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியபோது தேனி மக்களின் மனதில் உருவான நிம்மதி, தற்போது இல்லை என்றுதான் கூறவேண்டும். வெளி மாவட்ட, வெளி மாநில டிராவல் ஹிஸ்ட்ரியால் தேனியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால், தேனி மக்கள் நிம்மதியிழந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இதுவரை 66 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் நேற்று, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 பேரில், குஜராத்திலிருந்து இரு தினங்களுக்கு முன்னர் தேனி, தேவதானப்பட்டி வந்த நபர் ஒருவர் உள்ளார்.

டாஸ்மாக் சென்ற கொரோனா நோயாளி.. அதிர்ச்சிகொடுத்த டிராவல் ஹிஸ்ட்ரி.. அச்சத்தில் தேனி மக்கள்!
தேவதானப்பட்டில் மூடப்பட்டுள்ள தெரு
தேவதானப்பட்டில் மூடப்பட்டுள்ள தெரு
கடந்த சில நாள்களாக தேனியில் ஏற்பட்ட கொரோனா தொற்றும், கோயம்பேடு ட்ராவல் ஹிட்ரியால்தான். அதில் ஒரு நபர், டாஸ்மாக் சென்று வரிசையில் நின்று மது வாங்கினார் எனத் தகவல் வெளியானது.

குஜராத்தில் பாத்திரக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்த நபர், அங்குள்ள புலம்பெயர் தமிழகத் தொழிலாளர்களுடன் இணைந்து, சிறப்பு ரயில் மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த அந்த நபரை, அவரின் சகோதரர் இருசக்கர வாகனத்தில் தேவதானப்பட்டி அழைத்து வந்துள்ளார்.

நாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்!
corona
corona

தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார ஊழியர்கள், குஜராத்தில் இருந்து வந்திருக்கும் தகவல் அறிந்து, அவரிடம், ரத்தம் மற்றும் ஸ்வாப் மாதிரிகள் எடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று, அந்த நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் வசித்த பகுதி முழுவதுமாக சீலிடப்பட்டு, சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் என்றால், கோயம்பேடு டிராவல் ஹிஸ்ட்ரி மூலமாக, ஓடைப்பட்டியில் ஒரே நாளில் 6 நபர்களுக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. காய்கறி ஏற்றிச்சென்ற டிரைவர் மூலமாகவே இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தேனியில் ஏற்பட்ட கொரோனா தொற்றும், கோயம்பேடு ட்ராவல் ஹிட்ரியால்தான். அதில் ஒரு நபர், டாஸ்மாக் சென்று வரிசையில் நின்று மது வாங்கினார் எனத் தகவல் வெளியானது.

காட்டுரோடு சோதனைச் சாவடி
காட்டுரோடு சோதனைச் சாவடி

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்களைக் கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும், தேனி மாவட்டத்தின் இரு எல்லைகளில், ஒரு எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் மக்களை அனுமதிக்காமல், காட்டுரோடு வழியாகவே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும், வெளிமாவட்ட, வெளி மாநில டிராவல் ஹிஸ்ட்ரியால் தேனி மாவட்டத்தில், ஏறுமுகமாக இருக்கும் கொரோனா பாதிப்பில் இருந்து, கண்காணிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டப்படுகிறதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

`70 கிலோமீட்டர் சுற்றி வருகிறோம்!’ - கொரோனா கண்காணிப்பால் அவதிப்படும் தேனி மக்கள்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவிடம் பேசினோம். ``காட்டுரோடு பகுதியில் கண்காணிப்பில் எந்தக் குறைபாடுகளும் இல்லை. காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில், எங்கிருந்து வருகின்றனர், என்ன காரணம் எனத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, கொரோனா பரிசோதனை முடிந்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Theni Collector M Pallavi Baldev
Theni Collector M Pallavi Baldev

மக்களின் ஒத்துழைப்பும் எங்களுக்கு அவசியம். உங்கள் வீட்டின் அருகே, யாரேனும், வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்து, அவர்கள் வீட்டுத்தனிமையில் இருக்கிறார்களா எனப் பாருங்கள். அந்த நபர்கள், வெளியே சுற்றினாலோ மற்ற நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினாலோ 04546 - 261093/1077 என்ற எண்ணிற்கு அழைத்து தெரியப்படுத்துங்கள். சில நாள்களில் நிலைமை கட்டுக்குள் வரும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு