Published:Updated:

நவ.1-ம் தேதி நகர, மாநகர சபைக் கூட்டம்; பம்மலில் பங்கேற்கும் முதல்வர்! - முன்னேற்பாடுகள் தீவிரம்

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர, மாநகர சபைக் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறவுள்ளது.

நவ.1-ம் தேதி நகர, மாநகர சபைக் கூட்டம்; பம்மலில் பங்கேற்கும் முதல்வர்! - முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர, மாநகர சபைக் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறவுள்ளது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அந்தந்த அமைப்புகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை நேரில் சென்று கவனித்து அவற்றை நிறைவேற்றித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பணியாற்றி வருகின்றன. மேலும், மக்களின் அன்றாட தேவைகள், பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபைக் கூட்டங்கள் பயன்படுகின்றன. கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக பல்வேறு மக்கள் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, குடியரசு தினம் (ஜன.26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய தினங்களில் தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கிராம சபைக்  கூட்டம் [கோப்பு படம்]
கிராம சபைக் கூட்டம் [கோப்பு படம்]

கிராம  பஞ்சாயத்துத் தலைவர், கிராம சபைக் கூட்டத்திற்கு  தலைமை தாங்குவார். கிராம சபை போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களின் மக்களின் குறைகளைக் கேட்டறியவும் நகர சபையை அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், கடந்த 21.2.2022 அன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் தலைமைச் செயலாளர் இறையன்பை நேரில் சந்தித்து, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமியற்றப்பட்டு இன்னமும் நடைமுறைக்கு வராத ஏரியா சபை மற்றும் வார்டு  கமிட்டிகளை  நடைமுறைப்படுத்தக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தார்.  

தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தபோது
தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தபோது

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்  வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான  விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும், வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் அமைக்கப்பட்டன. 

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநகர சபைக் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பல்லாவரம் அருகே பம்மல் 6-வது வார்டில் திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாநகர, நகர சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். அப்போது, நேரடியாக மக்களின் குறைகளைக் கேட்டறியவிருக்கிறார் அவர். இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதேபோல், வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர்  தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்து அந்தக் குழுவுக்கான உறுப்பினர்களையும் மன்றங்களே தேர்வு செய்யும்.

அரசாணை
அரசாணை

இதேபோல், வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பகுதி சபையை உருவாக்கி  சம்பந்தப்பட்ட  வார்டு கவுன்சிலரே  தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். அந்த வகையில், வார்டு கமிட்டி குழு மற்றும் பகுதி சபா கூட்டங்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சிக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர்.