Published:Updated:

தஞ்சாவூர்: நெருக்கடிகளை மீறி ஓப்பன் டெண்டர்!- மாநகராட்சி கமிஷனருக்கு குவியும் பாராட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தஞ்சாவூர்  மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார்
தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார் ( ம.அரவிந்த் )

ஆளுங்கட்சியின் ஒரு தரப்பினர், எதிர்க்கட்சியினர், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் கொடுத்த நெருக்கடிக்கு மத்தியில், தஞ்சாவூர் மாநகராட்சி வருமானத்தைப் பெருக்குவதற்காக கமிஷனர் ஓப்பன் டெண்டர் முறையை அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியாத சூழலில், நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்த சூழ்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகள் ஓப்பன் டெண்டர் மூலம் ஏலம்விடப்பட்டு, அதில் கிடைத்த வருவாய் மூலம் ஊழியர்களுக்குச் சம்பளம் அளித்ததுடன், பல்வேறு செயல்களையும் செய்துள்ள மாநகராட்சி கமிஷனரை பல தரப்பினர் பாராட்டிவருகின்றனர்.

தஞ்சாவூர்  மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார்
தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார்

தஞ்சாவூரில், ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், அதன் எதிரே உள்ள திருவையாறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்து நிலையம், அதிலிருந்த கடைகள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையம், கடைகள் கட்டப்பட்டன. இதில் மொத்தம் 93 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம்விடுவதாக மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார் அறிவித்தார். இதற்கு ஏற்கெனவே கடை வைத்திருந்த வணிகர்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏலம் நடைபெற்ற முதல் இரண்டு நாள்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்துக்கும் சென்றிருக்கின்றனர்.

ஆனாலும் ஓப்பன் டெண்டர் முறை எந்தத் தொய்வுமின்றி நடைபெற்றது. பொதுமக்கள் உட்பட பலரும் ஏலத்தில் கலந்துகொண்டனர். ஏலத்தில் புதிதாகக் கடை கிடைத்த பலர், `ஓப்பன் டெண்டர் முறை இல்லைன்னா நிச்சயம் எங்களுக்குக் கடை கிடைத்திருக்காது’ என கமிஷனரைப் பாராட்டிவிட்டுச் சென்றனர்.

ஓப்பன் டெண்டர்
ஓப்பன் டெண்டர்

இந்தநிலையில் கடைக்கான டெபாசிட்,12 மாதங்களுக்கான வைப்பு தொகை ஆகிவற்றின் மூலம் கிடைத்த பணத்தின் மூலம் மாநகராட்சி ஊழியர்களுக்குச் சம்பளம் போடப்பட்டுள்ளது. அத்துடன் மாநகராட்சி சார்பில் செலுத்த வேண்டியிருந்த மின் கட்டணம் உள்ளிட்டவையும் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``மாநகராட்சியில் போதிய வருமானம் இல்லாமல் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம், ஒய்வூதியம் வழங்க முடியவில்லை. அத்துடன் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஒய்வுபெற்ற பணியாளர்களுக்கு, ஒய்வூதியப் பணப் பலன்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையறிந்த கமிஷனர் சரவணக்குமார் மாநகராட்சி வருமானத்தைப் பெருக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆளுங்கட்சியின் ஒரு தரப்பினர், எதிர்க்கட்சியினர், வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் கொடுத்த நெருக்கடிக்கு மத்தியில் மாநகராட்சியின் வருமானத்தைப் பெருக்குவதற்காக கமிஷனர் ஓப்பன் டெண்டர் முறையை அறிவித்தார். கடைக்கான அட்வான்ஸ் பணம், பன்னிரண்டு மாதங்களுக்கான டெபாசிட் தொகை ஆகியவற்றை கடையை ஏலம் எடுத்தவர்கள் செலுத்தினர். ஒரு கடை ரூ.50,000 தொடங்கி லட்சக்கணக்கில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

ஓப்பன் டெண்டரின்போது
ஓப்பன் டெண்டரின்போது

வருவாயாக வந்த இந்தத் தொகையின் மூலம் 970 ஊழியர்களின் சம்பளம்,160 ஒய்வூதியாளர்களுக்கான ஒய்வூதியம் என 11 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியிருக்கிறது. இது ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்தடுத்து நிலுவையிலுள்ள பென்ஷன் உள்ளிட்ட தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் சொத்து, தண்ணீர் வரி என பொதுமக்களிடையே வசூலிக்கும் வரி, மாநகராட்சி இடத்திலுள்ள கடைகளுக்கான வாடகைப் பணம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து வருடத்துக்கு சுமார் ரூ.22 கோடி மட்டுமே வருமானமாக வந்தது. ஆனாலும் செலவினங்கள் அதை விட அதிகமாக இருந்ததால் நிதி நெருக்கடி தொடர்ந்தது. இந்தநிலையில், ஓப்பன் டெண்டர் மூலம் கடைகளை ஏலம் விட்டதன் மூலம் மட்டும் சுமாராக ரூ. 20 கோடி கிடைத்திருக்கிறது. இவை தவிர்த்து வரி வசூல் செய்யும் வருவாய் உள்ளது. புரோக்கர்கள், கடையைக் குறைந்த வாடகைக்கு எடுத்து, உள் வாடகைக்கு விடுவதைத் தவிர்த்து நேரடியாக ஓப்பன் டெண்டர் முறையை செயல்படுத்தியதால் இவை சாத்தியமாகியிருக்கின்றன.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்ற ஓப்பன் டெண்டர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்ற ஓப்பன் டெண்டர்

மேலும் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பல கோடி மதிப்புடைய இடங்களைச் சொற்ப வாடகைக்கு எடுத்து பலர் கோடிகளில் சம்பாதித்துவருகின்றனர். அந்த இடங்களையும் மீட்டு இது போன்ற முறையைக் கடைப்பிடித்து ஏலம் நடத்தினால் தஞ்சாவூர் மாநகராட்சியின் வருமானம் எங்கேயோ போய்விடும். பொதுமக்களிடம் சொத்து, தண்ணீர் உள்ளிட்ட வரிகளை ஏற்றி அவர்களது தலையில் சுமத்தும் சூழ்நிலைக்கான அவசியமில்லை.

தஞ்சாவூர்: மாநகராட்சிக் கடைகள் ஓப்பன் டெண்டரில் ஏலம்; ஆணையருக்கு எதிராக வணிகர்கள் சாலைமறியல்!

இதே முறையை அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றிலும் கடைப்பிடித்தால் நிதி நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பணிக்கு வந்து 25 நாள்களில் இந்தப் பெரும் நடவடிக்கையை கமிஷனர் சரவணக்குமார் மேற்கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு