Published:Updated:

`சில்லறை பாக்கி கேட்டதால் தகராறு; அவதூறாகப் பேசிய நடத்துநர்?'-குழந்தையுடன் சாலை மறியல் செய்த தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேருந்து முன் அமர்ந்து போராட்டம்
பேருந்து முன் அமர்ந்து போராட்டம்

தம்பதி சில்லறை பாக்கி தாரத நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தனர். அதனால், ஆத்திரமடைந்த பேருந்து நடத்துநர் ஜெய்சங்கர் அவர்களைத் தகாத வார்த்தைகளால் அவதூறாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை கிளம்பிய அரசு பேருந்தில் ராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த கோபி- சிந்து தம்பதி, தங்கள் குழந்தையுடன் மதுரையிலிருந்து வந்திருக்கின்றனர்.

பேருந்து முன் போராட்டம்
பேருந்து முன் போராட்டம்

அப்போது, பயணச்சீட்டு கொடுத்த நடத்துநர் ஜெயசங்கர், சில்லறை பாக்கியைப் பின்னர் தருவதாகக் கூறியிருக்கிறார்.

பேருந்து மண்டபத்தைக் கடந்து ராமேஸ்வரத்தை நெருங்கவிருந்த நிலையில், கோபி நடத்துநரிடம் சில்லறை பாக்கி கேட்டிருக்கிறார். ஆனால், நடத்துநர் ஜெய்சங்கர் கண்டும், காணாமல் இருந்திருக்கிறார்.

சமாதனப்படுத்தும் மற்ற பயணிகள்
சமாதனப்படுத்தும் மற்ற பயணிகள்

அதனால், கோபியும் அவர் மனைவி சிந்துவும் சில்லறை பாக்கி தாரத நடத்துநரிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். ஆத்திரமடைந்த பேருந்து நடத்துநர் ஜெய்சங்கர் அவர்களைத் தகாத வார்த்தைகளால் அவதூறாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால், மனமுடைந்து போன தம்பதி, மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, பேருந்து முன் அமர்ந்து அவதூறாகப் பேசிய நடத்துநரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தையுடன் கணவனை - மனைவி இருவரும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து முன் அமர்ந்து போராட்டம்
பேருந்து முன் அமர்ந்து போராட்டம்

அதையடுத்து, பேருந்திலிருந்த மற்ற பயணிகள் உடனடியாக இறங்கி அவர்களைச் சமாதானப்படுத்தினர். ஆனால், அந்த தம்பதி தங்களிடம் நடத்துநர் ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உறுதியாகக் கூறியதை அடுத்து, மண்டபம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், நடத்துநர் ஜெய்சங்கர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாகக் கூறி பேருந்தை அனுப்பி வைத்தனர்.

தம்பதி கைக்குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

ராமேஸ்வரம்: கோயில் தீர்த்தங்களைத் திறக்கக் கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு