Published:Updated:

ஃபிளெக்ஸ் விழுந்து மனைவி பலி; கணவர் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்!

மதுரை உயர் நீதிமன்றம்

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சை அருகே கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி (55) என்ற பெண் உயிரிழந்தார்.

ஃபிளெக்ஸ் விழுந்து மனைவி பலி; கணவர் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்!

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சை அருகே கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி (55) என்ற பெண் உயிரிழந்தார்.

Published:Updated:
மதுரை உயர் நீதிமன்றம்

தஞ்சாவூர் அருகே, சாலையோரம் வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி ஃபிளெக்ஸ் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் விஜயராணி என்ற பெண் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிளெக்ஸ் குறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஃபிளெக்ஸ் குறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, 2019-ம் ஆண்டு சென்னை, பள்ளிக்கரணையில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சாலையின் நடுவே வைத்த ஃபிளெக்ஸ் சரிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஃபிளெக்ஸ் பேனர் வைக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தொடக்கத்தில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டின. காலப்போக்கில், இதைக் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவும் காற்றில் பறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சை அருகே கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம், அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி (55) என்ற பெண் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விஜயராணியின் கணவர் சாமிக்கண்ணு, `ஃபிளெக்ஸ் வைப்பதைத் தடை செய்து நீதிமன்றம் அளித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. இதனால் என் மனைவி உயிரிழந்துவிட்டார். அவர் மரணத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Highway (Representational Image)
Highway (Representational Image)
Photo: Vikatan / Ashok kumar.D

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக உள்துறைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சாமிக்கண்ணு தரப்பில் விசாரித்தோம்.

``தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தை அடுத்த மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் தந்தை முத்துவீரப்பன் இறந்துவிட்டார்.

பின்னர் நடைபெற்ற படத்திறப்பு விழாவுக்காக, மெயின் ரோட்டில் பெரிய ஃபிளெக்ஸ் ஒன்றை ரவிச்சந்திரன் வைத்துள்ளார். அப்போது விஜயராணி திருவோணம் அருகே உடையப்பன் விடுதியில் தன் சகோதரர் வீட்டுக்கு வந்துவிட்டு, பரமசிவம் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு மெயின் ரோடு வழியாகச் சென்றார். மேல மேட்டுப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் வைத்திருந்த ஃபிளெக்ஸ் பேனர் சரிந்து, விஜயராணி சென்ற டூவீலர் மீது விழுந்தது. இதில், சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த விஜயராணி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Court -Representaional Image
Court -Representaional Image

இது தொடர்பாக திருவோணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேனர் வைத்த ரவிச்சந்திரனையும் அப்போது கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தியிருந்தால் ஃபிளெக்ஸ் வைத்திருக்க மாட்டார்கள். அதில் அலட்சியமாகச் செயல்பட்டதால் பலரும் பல நிகழ்ச்சிகளுக்காக ஃபிளெக்ஸ் வைப்பதைத் தொடர்ந்தனர். இந்த நிலையில்தான் கண்ணீர் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ் விழுந்து விஜயராணி உயிரிழந்தார். கோர்ட் உத்தரவு நடைமுறைப் படுத்தப் பட்டிருந்தால் விஜயராணி தற்போது உயிருடன் இருந்திருப்பார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது'' என்று தெரிவித்தனர்.