Published:Updated:

கொரோனா: தந்தை மரணம்; மருத்துவமனையில் மகன்! - நெகிழவைத்த தன்னார்வலர்கள் உதவி

எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்
எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் உடலைப் பெற்று அவர்களின் மத வழக்கப்படி அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்கிறார்கள், எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்.  

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் வேகம் பிடித்துள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. 

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உறவினர்கள் கூட அருகில் வரத் தயங்கும் நிலையில் சில இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் உடலைத் தூக்கி வீசும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இரு டாக்டர்களுக்கு கொரோனா; தப்பாத ஆட்சியர் அலுவலகம்! -அதிர்ச்சிகொடுத்த நெல்லை நிலவரம்

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடல்களை, அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் பெற்று நல்லடக்கம் செய்யும் பணியில் மாநிலம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அதுவும் , உயிரிழந்தவர்களின் சமய வழக்கப்படி அடக்கம் செய்யப்படுகிறது. 

கொரோனா பாதிப்பில் இறந்தவரை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்
கொரோனா பாதிப்பில் இறந்தவரை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூலை 6-ம் தேதி) உயிரிழந்தார்.

ஆலங்குளத்தைச் சேர்ந்த விவசாயியான அந்த முதியவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருமே நோய் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால் அவர்களால் முதியவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட முடியவில்லை.

கிறிஸ்துவ முறைப்படி அடக்கம்
கிறிஸ்துவ முறைப்படி அடக்கம்

இந்த நிலையில், எஸ்.டி.பி.ஐ அமைப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், முதியவரின் உடலைப் பெற்று சொந்த ஊருக்குக் கொண்டு சென்று கிறிஸ்துவ வழக்கப்படி அடக்கம் செய்தார்கள். அவர்களின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

உயர் அதிகாரியின் அழைப்பு: உயிரிழந்த பி.டி.ஓ? - கொரோனா அதிர்ச்சியில் திருவள்ளூர் தி.மு.க

இது குறித்து எஸ்.டி.பி.ஐ அமைப்பின் நெல்லை மாவட்ட பொதுச் செயலாளரான பீர் மஸ்தான் கூறுகையில், ``எங்களுக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் பேசியவர், `என் தந்தை கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்துவிட்டார். குடும்பத்தினர் அனைவருமே பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிறோம். அதனால், எங்கள் சார்பாகத் தந்தையின் உடலை அடக்கம் செய்ய உதவுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.  

ஏற்பாடுகளைச் செய்யும் தன்னார்வலர்கள்
ஏற்பாடுகளைச் செய்யும் தன்னார்வலர்கள்

அதனால், எங்கள் அமைப்பின் சார்பாக அந்த முதியவரின் உடலைப் பெற்று நாங்களே கிறிஸ்துவ வழக்கப்படி பெட்டி வாங்கி அதில் உடலை வைத்து அடக்கம் செய்தோம். தூரத்தில் நின்று நாங்கள் அடக்கம் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களும் உறவினர்களும் நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ சார்பாக நெல்லையில் 6 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 8 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதில் 6 பேர் பணியிலும் இருவர் மாற்று ஆட்களாகவும் இருப்பார்கள். ஒரு அடக்கம் செய்த பின்னர் அந்தக் குழுவினர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் பணியாற்றுகிறார்கள்.

எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்களின் பணி
எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்களின் பணி

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்ப வழக்கப்படியும் அவர்களின் மதப் பழக்கவழக்கங்களின் படியும் உடல் அடக்கம் நடக்கிறது. இதற்காக இந்த அமைப்பினரும் தன்னார்வலர்களும் எந்தக் கட்டணமும் பெற்றுக்கொள்வதில்லை. அவர்களின் இந்த மனிதாபிமான உதவிக்கு பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

அடுத்த கட்டுரைக்கு