Published:Updated:

வாட்ஸ்அப் மூலம் திரட்டப்பட்ட ₹6 லட்சம் நிதி; முதிய தம்பதிக்கு வீடு கட்டிக் கொடுத்த தோழர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கட்டி கொடுக்கப்பட்ட புதிய வீடு
கட்டி கொடுக்கப்பட்ட புதிய வீடு

``எப்படியாச்சும் அந்தத் தம்பதியை நல்ல வீட்டுல குடியேத்தணும்னு முடிவு செஞ்சோம். உடனே வாட்ஸ்அப் குழு ஆரம்பிச்சு, இதுக்காக மக்கள்கிட்ட நிதி திரட்ட ஆரம்பிச்சோம். ஒரே நாள்லயே ஒரு லட்சம் சேர்ந்தது. அது இன்னும் நம்பிக்கையா இருந்து."

கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி நிர்வாகிகள் சிலர் அந்த மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வந்தனர். அப்படி செல்கையில், பந்தலூர் அருகில் உள்ள அய்யன்கொல்லி பகுதியில் மண்ணால் கட்டப்பட்டு சரியான கூரை கூட இல்லாமல் சிதலமைடந்த நிலையில் இருந்த ஒரு குடிசையில், ஒரு முதிய தம்பதி வாழ்ந்து வருவதைக் கண்டு வருத்தமடைந்தனர்.

பாப்பச்சன் தம்பதி வாழ்ந்த குடிசை வீடு
பாப்பச்சன் தம்பதி வாழ்ந்த குடிசை வீடு
முதல் நாள் மனு, 24 மணி நேரத்தில் வீடு; 3 பிள்ளைகளோடு தவித்த தாய்க்கு உதவிய அமைச்சர்!

அந்தத் தம்பதிக்குப் புதிய வீடு ஒன்றை கட்டிக்கொடுக்க முடிவு செய்தனர் நிர்வாகிகள். அதற்காக கடந்த ஜூன் மாதம் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பொது மக்களிடம் இருந்து நிதியைத் திரட்டி வந்தனர். இந்நிலையில், 4 மாதங்களில் வீட்டைக் கட்டி முடித்து, அந்தத் தம்பதியை புது வீட்டில் குடியமர்த்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

``எப்படியாச்சும் அந்தத் தம்பதியை நல்ல வீட்டுல குடியேத்தணும்னு முடிவு செஞ்சோம். உடனே வாட்ஸ்அப் குழு ஆரம்பிச்சு, இதுக்காக மக்கள்கிட்ட நிதி திரட்ட ஆரம்பிச்சோம். ஒரே நாள்லயே ஒரு லட்சம் சேர்ந்தது. அது இன்னும் நம்பிக்கையா இருந்து. அடுத்தடுத்த மாசத்துல 6 லட்சம் ரூபாய் வரை கிடைச்சது. அந்தப் பணத்தை வெச்சி 470 சதுர அடியில அழகான ஒரு வீட்டை நாலு மாசத்துல கட்டி முடிச்சோம். உடனடியா அவங்கள குடியேத்துனோம். கஷ்டத்துலயும் உதவின்னு கேக்காம இருந்தாங்க அவங்க ரெண்டு பேரும்.

பாப்பச்சனும் லீலாவும்
பாப்பச்சனும் லீலாவும்
`இந்த உதவி போதும்; என் மகனை கரைசேர்த்திடுவேன்!' - பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கிய ஆட்சியர்

உதவி தேவைப்படும் ஒரு குடும்பத்துக்கு உதவி செய்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வீடு பாப்பச்சனுக்கும் லீலாவுக்கும் கடைசி காலம் வரை ஆறுதலா இருக்கும்னு நம்புறோம். அவங்களுக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைச்சதுல, அவங்கள விட எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தத் திட்டத்தை வெற்றிகரமா முடிக்க நிறைய பேர் நிறைய உதவி செஞ்சிருக்காங்க. எல்லாருக்குமே நன்றி" என்றனர் நிர்வாகிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு