Published:Updated:

`மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளையும் மூடுங்கள்!' - கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன்

திருச்சியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசு அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளையும் மூட கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் அன்புச்செல்வன்
கலெக்டர் அன்புச்செல்வன் ( எஸ்.தேவராஜன் )

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித்வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 48 மணி நேரத்தைக் கடந்து நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், கருர் எம்.பி ஜோதிமணி ஆகியோர் முகாமிட்டு மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

குழந்தை சுஜித்
குழந்தை சுஜித்
எஸ்.தேவராஜன்
`ஸ்டாப்பில் நிற்பதில்லை; மாணவர்கள் ஏறினால் வசைபாடுவார்!'- கண்டக்டருக்கு கலெக்டரின் விசித்திர தண்டனை

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் என்.எல்.சி சுரங்கம் தோண்டும் தொழில்நுட்ப குழுவினர், ஓ.என்.ஜி.சி குழு ஆகியோர் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் குழந்தையைப் பத்திரமாக மீட்க வேண்டும் எனப் பல தரப்பினரும் ஜாதி, மதங்களைக் கடந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர், அமைச்சர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் கமல், ரஜினி போன்ற அனைவரும் சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள்
எஸ்.தேவராஜன்

நாடே தீபாவளி பண்டிக்கையைக் கொண்டாடி வரும் நிலையில் தமிழகத்தில் தீபாவளியை மறந்து சிறுவன் பத்திரமாக மீட்க வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் சிறுவன் சுர்ஜித் மீட்பு நடவடிக்கை செய்தியே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று வெளியிட்டுள்ள ஆடியோவில், `அனைவருக்கும் வணக்கம். நான் கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் பேசுகிறேன். திருச்சியில் நடந்த சம்பவத்தில் போர்வெல்லில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

கலெக்டர் அன்புச்செல்வன்
கலெக்டர் அன்புச்செல்வன்
எஸ்.தேவராஜன்

தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக எல்லா மாவட்டங்களிலும் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் எனக் கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.