Published:Updated:

`உயிரைப் பறித்த உளுந்துவடை!’ - குடிபோதையால் புதுவை முதியவருக்கு நேர்ந்த துயரம்

ஆனாலும், வடை தொண்டையைவிட்டு உள்ளே செல்லாமலும், வெளியே வராமலும் சிக்கிக்கொண்டதில் அந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் போடி தெருவைச் சேர்ந்தவர் மணி. 75 வயதான இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். தமிழகத்தில் சாராயம் இல்லை என்பதாலும், மலிவு விலையில் கிடைக்கும் என்பதாலும் தினமும் புதுச்சேரிக்கு வந்து சாராயம் குடித்துவிட்டுச் செல்வார் என்கிறார்கள்.

முதியவர் மணி
முதியவர் மணி

கடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புதுச்சேரி எல்லையான முள்ளோடை. தமிழகப் பகுதி என்பதால் இங்குதான் சாராயக் கடைகளும் மதுபானக் கடைகளும் வரிசை கட்டி நிற்கும்.

அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

அதனால், தினமும் ஷேர் ஆட்டோவில் 10 ரூபாய் கொடுத்துவிட்டு புதுச்சேரிக்கு வந்து மதுகுடித்துவிட்டுச் செல்வது கடலூர்வாசிகளின் வழக்கம். அப்படித்தான் நேற்று முதியவர் மணி சாராயம் குடிக்க புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். சாராயத்துக்கு சைட் டிஷ்ஷாக உளுந்து வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே சாராயத்தை குடித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக வடை அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடித்திருக்கிறார்.

சாராயம்
சாராயம்

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி காவலர்களும், மற்ற குடிமகன்களும் அவருக்குத் தண்ணீர் குடித்து உதவ முயன்றனர்.

ஆனாலும், வடை தொண்டையைவிட்டு உள்ளே செல்லாமலும், வெளியே வராமலும் சிக்கிக்கொண்டதில் அந்த முதியவர் மயங்கி விழுந்தார். உடனே, அங்கிருந்தவர்கள், காவலர்கள் அவரை கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வடை தொண்டையில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.