Published:Updated:

`துர்நாற்றம் வீசும் பிச்சாவரம் சுற்றுலா மையம்!’ - சுட்டிக்காட்டிய ஜூ.வி; களமிறங்கிய அமைச்சர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்
பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் சுற்றுலா மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து ஜூ.வி வெளியிட்ட வீடியோ செய்தியின் தொடர்ச்சியாக, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அங்கு ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டம், கிள்ளைப் பகுதியில் அமைந்திருக்கும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாங்குரோவ் காடுகளாகக் கருதப்படுகின்றன. சுமார் 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தக் காடுகளின் ஊடே சிறு சிறு தீவுகள் அமைந்திருக்கின்றன. அந்தத் தீவுகள் பல அரிய வகை வெளிநாட்டுப் பறவைகளின் தங்குமிடங்களாக அமைந்திருக்கின்றன.

பிச்சாவரம் படகு இல்லம்
பிச்சாவரம் படகு இல்லம்

அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டே அலையாத்திக் காடுகளின் வழியே கழிமுக ஆற்றில் படகு சவாரி செய்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். படகில் செல்வதற்கு ரூ.400 முதல் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் கார்களில் வந்துசெல்கின்றனர்.

ஆண்கள், பெண்கள் என நாளொன்றுக்கு சுமார் 500 முதல் 600 சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் பிச்சாவரத்தில் இருக்கும் கழிப்பறை போதுமான பராமரிப்பின்றி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை வருவாயுள்ள சுற்றுலா மையத்தின் கழிவறைக்குள் சுற்றுலாப்பயணிகள் மூக்கைப் பொத்திக்கொண்டு வரும் நிலை காணப்படுகிறது.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுடன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுடன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்

அதுமட்டுமின்றி பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு, போதுமான பராமரிப்பின்றி கிடக்கும் அந்தக் கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே சுற்றுலாப்பயணிகள் அதற்குள் சென்று வருவது குறித்து கடந்த 27 செப்டம்பர் தேதியன்று நமது ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் தொடர்ச்சியாக நேற்று இரவே கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அங்கு அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரான மதிவேந்தன், பிச்சாவரம் சுற்றுலா மையம் செயல்படும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து இரவு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் தங்கிய அவர், இன்று காலை மீண்டும் பிச்சாவரம் சென்று படகில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ``பிச்சாவரம் சுற்றுலா மையம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று மானியக் கோரிக்கை மீதான விவாதித்தில் தெரிவித்திருக்கிறோம்.

Vikatan

தற்போது இங்கிருக்கும் கழிவறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை சீரமைக்கும்படி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். அதேபோல சுற்றுலாப்பயணிகள் தங்கும் அறைகளைச் சீரமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். படகு சவாரிக்கான நேரத்தைக் காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் அதிகப்படுத்த வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்திருக்கிறோம். மேலும் இங்கு தங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துவருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு