Published:Updated:

ஊட்டி வரை எதிரொலித்த மாண்டஸ் புயலின் தாக்கம்; கடும் பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை!

ஊட்டியில் மழை
News
ஊட்டியில் மழை

பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடுமையான குளிரைச் சமாளிக்க பகல் வேளையிலேயே மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்துவருகின்றனர்.

ஊட்டி வரை எதிரொலித்த மாண்டஸ் புயலின் தாக்கம்; கடும் பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை!

பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடுமையான குளிரைச் சமாளிக்க பகல் வேளையிலேயே மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்துவருகின்றனர்.

Published:Updated:
ஊட்டியில் மழை
News
ஊட்டியில் மழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் மாண்டஸ் புயலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்துவருகிறது.

ஊட்டியில் மழை
ஊட்டியில் மழை

நீலகிரியில் தற்போது பனிக்காலம் என்றாலும், இன்று காலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. கடும் பனி மூட்டம் காரணமாக பகல் பொழுதே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சில மீட்டர் தொலைவைக்கூட தெளிவாகக் காண முடியாத வானிலை நிலவுவதால், மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை மெதுவாக இயக்கிவருகின்றனர். இந்தத் தொடர் சாரல் மழையால் ஊட்டியில் வழக்கத்துக்கு மாறான கடுமையான குளிர் நிலவிவருகிறது. இதனால், மலைக் காய்கறி அறுவடையிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நீலகிரியில் பெரிய அளவிலான மழை எதிர்பார்க்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை.

குளிர்காயும் மக்கள்
குளிர்காயும் மக்கள்

இன்று காலையில் நிலவிய தொடர்மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்வு ஒன்றும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இதேபோல மழை நீடித்துவந்தால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடுமையான குளிரைச் சமாளிக்க பகல் வேளையிலேயே மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்துவருகின்றனர்.