Published:Updated:

மாம்பலம்: சாலைகள் சேதம்; பாதசாரிகளுக்கு கடும் இன்னல் - விரைந்து நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

மாம்பலம்
News
மாம்பலம்

மழையால் உஸ்மான் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், அந்த வழியே வரும் வாகனங்களுக்குச் சிரமமாக இருக்கிறது.

தி.நகர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாம்பலம் ரயில் நிலையம் வரை நடைபாலம் அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. 2021 இறுதிக்குள் இந்த பாலத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதால், மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் முழு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறார்கள். பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்வோர், உஸ்மான் சாலையையும், ரங்கநாதன் சாலையையும் தவிர்த்து இந்த பாலம் வழியே செல்லலாம். சுமார் 50,000 மக்கள் தினமும் இந்த வழியே செல்கிறார்கள். மேலும், பண்டிகை காலங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தி.நகர் வந்து செல்கிறார்கள். இந்த கூட்ட நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்த பணிகளின் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதி வழியாகத் தினமும் பயணிப்பவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மாம்பலம்
மாம்பலம்

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் பாபுவிடம் பேசினோம், ``இந்த நடைபாலம் வந்தால் எங்களை விடப் பாதசாரிகளுக்கு உதவியாக இருக்கும். கிட்டதட்ட ஒன்றரை வருடமாக இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொரானோ தொற்றால் பணி நீண்ட காலமாக நடந்துவருகிறது. இன்னும் ஒரு வருடம் நடக்கும் என நினைகிறேன். மழையால் உஸ்மான் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், அந்த வழியே வரும் வாகனங்களுக்குச் சிரமமாக இருக்கிறது. உஸ்மான் சாலை ஓரமாக உணவகங்கள் அதிகம் இருப்பதால் பாதசாரிகள் திண்டாடுகின்றனர். எனவே, அரசு அதிகாரிகள் துரிதமாக இந்தப் பணிகளை முடித்து நடைபாலத்தை திறக்க வேண்டும்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தி.நகர் பேருந்து நிலையம் அருகில் உணவகம் நடத்தி வரும் அசிமிடம் பேசினோம். ``இங்கு நடைபாலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டிருக்கின்றன. நடைபாலம் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே, சாலைகள் செப்பனிடப்படும் என்று கூறுகிறார்கள். சாலைகள் இப்படிக்குக் கிடப்பதால், எலித் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதிகாரிகள் விரைந்து முடித்து, சாலைகளைச் சீரமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

மாம்பலம்
மாம்பலம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் காளிமுத்துவை தொடர்பு கொண்டு பேசினோம். ``இது குறித்த தகவல் பெற ரிப்பன் மாளிகைக்கு நேரில் வந்தால் மட்டுமே கிடைக்கும்" என்றார்.

கூட்ட நெரிசலில் திக்கு முக்காடும் மாம்பலம் பகுதியில், இந்த நடைபாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசு இயந்திரங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- மாணவப் பத்திரிகையாளர்.