Published:Updated:

``எங்கம்மா வீட்டுக்கு மின் இணைப்பு கொடுங்க..!" - மண்டியிட்டபடி நூதன முறையில் மனு கொடுத்த மகள்

இளம்பெண் நூதன போராட்டம்

சுட்டெரிக்கும் வெயிலில் திடீரென மண்டியிட்டவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

``எங்கம்மா வீட்டுக்கு மின் இணைப்பு கொடுங்க..!" - மண்டியிட்டபடி நூதன முறையில் மனு கொடுத்த மகள்

சுட்டெரிக்கும் வெயிலில் திடீரென மண்டியிட்டவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Published:Updated:
இளம்பெண் நூதன போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒடுகம்பட்டி, பள்ளிவாசல் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பள்ளிவாசல் தெற்குத் தெருவில் சுமார் 250 வீடுகள் இருக்கின்றன. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், செல்லம்மாள் வீட்டுக்கும் மட்டும் அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் அலட்சியம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

தன் தாய் வீட்டில் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததை அறிந்த செல்லம்மாளின் மகள் வெள்ளையம்மாள், அவர் வீட்டுக்கு மின் இணைப்பு பெறவேண்டி கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது சுட்டெரிக்கும் வெயிலில் திடீரென மண்டியிட்டவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்று மனு கொடுக்க வைத்தனர். ஆட்சியரும் விசாரித்து மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

வெள்ளையம்மாள்
வெள்ளையம்மாள்

இது குறித்து வெள்ளையம்மாளிடம் கேட்டபோது, ``மின் இணைப்பு வழங்கக்கோரி பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. அதிகாரிகள் எங்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். அதனால், மாவட்ட ஆட்சியர் கணிவுகாட்டி அம்மாவின் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``செல்லம்மாள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா இல்லை. அதனால் மின் இணைப்பு கொடுக்கவில்லை" எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism