Published:Updated:

`போலீஸ் நண்பர்களே.. கொஞ்சம் கனிவு காட்டுங்கள்!’ - கொரோனா அத்தியாவசிய பணியாளர்களின் கோரிக்கை!

ஊரடங்கு
ஊரடங்கு

பெண் எஸ்.ஐ., அபராதம் கட்டவில்லை என்றால் ஆட்டோவை விட முடியாது என்று கறாராக இருந்துள்ளார். தன்னால்தானே என்று அபராதத்தை அந்த கர்ப்பிணியே செலுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வெட்டியா சுத்துறவங்க மேல நடவடிக்கை எடுக்கிறது தப்பில்ல... ஆனா, கட்சி கொடி கட்டிய ஆடம்பர கார்களிலும், அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தவர்களின் வாகனங்களையும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை. அதிலும் மருத்துவ சிகிச்சைக்கும், அவசரத் தேவைக்கும், அரசு அனுமதித்துள்ள பணிகளுக்கும் செல்வோரிடம் காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதாக தமிழகம் முழுவதும் புகார் எழுந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததுள்ள நிலையில், தளர்வில்லாத ஊரடங்கை கடந்த 23-ம் தேதி அறிவித்த தமிழக அரசு, தற்போது ஜூன் 7-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தேவைதான் என்றாலும் அதனால் நடுத்தர மக்களும், சிறு வியாபாரிகளும், கூலி வேலையை நம்பியுள்ளவர்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், வீடற்றவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் மருத்துவப்பணி, தூய்மைப்பணி, ஊடகப்பணியிலுள்ள முன்களப் பணியாளர்களையும், மின் வாரியம், ஹோட்டல், மெடிக்கல், பால்விநியோகம், கேபிள் டிவி, ஆன்லைன் டெலிவரி போன்ற அத்தியவாசியப் பணிகளுக்கு செல்வோரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் உறவினர்களும் தினமும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவிக்கிறார்கள்.

ஊரடங்கு
ஊரடங்கு

தஞ்சாவூரில் சிகிச்சைக்காக கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆட்டோக்காரருக்கு அபராதம் விதித்துள்ள பெண் எஸ்.ஐ., அபராதம் கட்டவில்லை என்றால் ஆட்டோவை விட முடியாது என்று கறாராக இருந்துள்ளார். தன்னால்தானே என்று அபராதத்தை அந்த கர்ப்பிணியே செலுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையில் வெளியில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பாமல், மொத்தமாக பிடித்து வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்ட தாசில்தாரின் செயல் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இப்படி ஆட்களை மொத்தமாக ஆம்புலன்ஸில் ஏற்றினால் கொரோனா பரவாதா என்று கேட்கிறார்கள் அருப்புக்கோட்டை மக்கள்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

"உயிரைப் பொருட்படுத்தாமல் பால் விநியோகம் செய்ய செல்லும் பால் முகவர்களின் இருசக்கர வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்கிறது" என்று தமிழ்நாடு பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்கம் கண்டித்துள்ளது.

பூந்தமல்லியில் ஹோட்டல் நடத்தும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் நம்மிடம், " ஊரடங்கால் கடையை மூடிவிட்டு ஓய்வெடுக்க முடியாது. பெரிய வியாபாரம் இல்லாவிட்டாலும் நம்மள நம்பி வேலை செய்பவர்களுக்காக கடையைத் திறக்க வேண்டியுள்ளது. லாக் டௌன் அறிவிச்சப்பவே கடை தொறக்க வந்தேன். அப்ப வந்த சின்ன வயசு எஸ்.ஐ. ஒருத்தர் கடை தொறக்க அனுமதி இல்லன்னார். ஹோட்டலில் பார்சல் வியாபாரம் செய்ய அனுமதி உள்ளதுன்னு சொல்லியும் அவர் கேட்கல. அப்புறம் தெரிந்த பத்திரிக்கை நண்பர்கள் மூலமா போலீஸ் கமிஷனருக்கு விவரத்தை சொல்லி, அப்புறம் இங்குள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்த பின்புதான் கடை தொறக்க விட்டாங்க. இங்குள்ள பாக்டரியில வேலை செய்ற வெளியூர் பசங்க இப்பகுதியில் அதிகம் இருக்காங்க. அவங்களுக்காகத்தான் ஹோட்டல நடத்துறோம். போலீஸ் இப்படி கெடுபிடி பண்ணா பாவம் அந்த பசங்கதான் கஷ்டப்படுவாங்க." என்றவர்,

ஊரடங்கு - காவல்துறை
ஊரடங்கு - காவல்துறை
தே.அசோக்குமார்

ரெண்டு நாளைக்கு முன்னோடி ஹோட்டல் தொறக்க காலை 11.30 மனிக்கு டூவீலர்ல வந்தேன். பத்துக்கும் மேற்பட்ட வாலண்டியர் பசங்களோட நின்று வண்டிய நிப்பாட்டுன எஸ்.ஐ.யிடம், ஹோட்டல் தொறக்க போறேன்னு சொன்னேன். 12 மணிக்கு ஹோட்டல் தொறக்க 11.30க்கு ஏன் போறேன்னு கேள்வி கேட்கிறார். போய் சாப்பாடு தயார் செய்ய வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. என் வீடு நாலு கிலோ மீட்டர் தள்ளியிருக்கு. இனி டூவீலரில் வரக்கூடாது" என்கிறார்கள். இதுக்கு பேசாமல் சாப்பாட்டு கடைளும் இருக்கக்கூடாதுன்னு அறிவிச்சிடலாம்" என்றார் நொந்தபடி.

பார்சல் வழங்கும் பல ஹோட்டல்காரர்களும் இதேபோல் புலம்புகிறார்கள். பொது போக்குவரத்து இல்லாத நிலையில் ஹோட்டல் வேலைக்கு வெகு தூரத்திலிருந்து வருகின்றவர்கள் டூவீலரில் வந்தாலே பிடித்து வைத்துக்கொண்டு வழக்கு போடுவது சரியா என்கிறார்கள். " மதுரை சேம்பர் ஆப் காமர்ஸில் நடைபெறும் முகாமில் தடுப்பூசி போட வில்லாபுரத்திலிருந்து டூவீலரில் சென்ற என்னை காவல்துறை பிடித்து வைத்துக்கொண்டு மோசமாகப் பேசினார்கள்." என்று புலம்பினார் இளைஞர்.

காவல்துறை
காவல்துறை

கடந்த வாரம் மதுரை ஒத்தக்கடையில் வங்கிப் பணிக்கு சென்ற இளம்பெண்ணின் டூவீலரை நிறுத்திவைத்து ஆங்கிலத்தில் கேள்வி கேட்டிருக்கிறார் அங்கிருந்த காவல்துறை அதிகாரி. பதிலுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார் அந்தப் பெண். இதனால் கோபமடைந்த அந்த அதிகாரி வண்டியைத் தரமுடியாது, வழக்கு போடுவேன் என்று சத்தம் போட அப்பெண் நடந்து வங்கிக்குச் சென்றார். பின், காவல்துறை உயர்வதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டதும் வாகனம் விடுவிக்கப்பட்டது.

வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றுகிறவர்களின் வாகனங்களைப் பிடிக்காதீர்கள். வழக்கு மட்டும் பதிவு செய்யுங்கள், என்று ஆரம்பத்தில் டிஜிபி அறிவித்தார். ஆனால், சமீபகாலமாக அத்தியாவசியப் பணிக்கு செல்கிறவர்களின் வாகனங்கள் அதிகமாக பிடிக்கப்படுகிறது.

ஊரடங்கு
ஊரடங்கு

கடந்த மாதம் கொரோனா பணிக்கு சென்ற அரசு சித்த மருத்துவர் மதுரையிலும், இளம் மருத்துவர்கள் இருவர் பரமக்குடியிலும் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு