Published:Updated:

தேனி: `ஒரே வீட்டில் 5 பேருக்கு கொரோனா’ - மனமுடைந்த முதியவர் தற்கொலை

தற்கொலை
தற்கொலை

தன்னுடைய வீட்டில் உள்ள 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மனமுடைந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமம். இங்கே வசித்துவருபவர் பெத்தணன் (வயது 65). இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதுக் குழந்தை இருந்த நிலையில், மனைவி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, மனைவியின் இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்துள்ளார் பெத்தணன். இவர்களுக்கு மகன்கள், மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெத்தணன் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஐந்து நபர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால், பெத்தணன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் பெத்தணன். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை
தேனி: `தேடப்படும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம்’ - சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய இன்ஸ்பெக்டர்

இது குறித்து போலீஸார், ``வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் உயரமான ஜன்னல் கம்பியில், நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனை அனுப்பியுள்ளோம். வீட்டில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் கடந்த சில நாள்களாகவே மனமுடைந்து இருந்ததாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரிக்கிறோம். அவரது மூன்றாவது மனைவி கொடுத்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்

அடுத்த கட்டுரைக்கு