Published:Updated:

குமரியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை - தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு!

கனமழை
கனமழை

`கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 11-ம் தேதியோடு முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தற்போது வரை கனமழை பெய்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காற்றழுத்தத் தாழ்வுநிலை: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
காற்றழுத்தத் தாழ்வுநிலை: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகியிருக்கிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி கடலுக்கிடையே நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம்: கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள்! - தத்தளிக்கும் மக்கள்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும். ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை
மழை
ராகேஷ் பெ

மதுரை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு