Published:Updated:

50 விலங்குகள் டார்கெட்; 6ல் வெற்றி! பாதுகாப்பு அரணில் வேட்டை பயிற்சி பெறும் புலி; ஆச்சர்யத் தகவல்கள்

புலி

நாட்டில் இதுவரை 20 புலிகளுக்கு இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வேட்டை பயிற்சி வழங்கப்பட்டு வரும் புலியின் தற்போதைய நிலை.

50 விலங்குகள் டார்கெட்; 6ல் வெற்றி! பாதுகாப்பு அரணில் வேட்டை பயிற்சி பெறும் புலி; ஆச்சர்யத் தகவல்கள்

நாட்டில் இதுவரை 20 புலிகளுக்கு இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வேட்டை பயிற்சி வழங்கப்பட்டு வரும் புலியின் தற்போதைய நிலை.

Published:Updated:
புலி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், காயங்களுடன் ஆண் புலிக்குட்டி ஒன்று கண்டறியப்பட்டது. தாயைப் பிரிந்திருந்ததால், வனத்துறையினர் அந்தப் புலியை மீட்டு சிகிச்சை கொடுத்தனர்.

புலி மீட்கப்பட்டபோது
புலி மீட்கப்பட்டபோது

தொடர்ந்து அந்தப் புலியை கூண்டில் வைத்து பராமரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக புலியை பாதுகாப்பு அரணில் வைத்து வேட்டை பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். சிறிய வயதிலேயே குட்டி புலி தாயைப் பிரிந்திருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் இயல்பிலேயே அதற்கு காடு, வேட்டை போன்றவற்றில் பலம் குறைந்திருக்கும். எனவே, அதன் வேட்டைத் திறனை மேம்படுத்த மந்திரிமட்டம் என்ற பகுதியில் சுமார் 10,000 சதுர அடியில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. உணவு, தண்ணீர் வசதிகளுடன் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

புலி
புலி

அதன் தற்போதைய நிலை குறித்து வனத்துறையினர் கூறுகையில், “பொதுவாக இதுபோன்ற காயமடைந்த அல்லது தாயைப் பிரிந்த புலி கிடைத்தால் அதை உயிரியல் பூங்காவில் தான் விடுவோம். கடைசி வரை அந்த புலி கூண்டுக்குள்ளேயே தான் இருக்க வேண்டும்.

முதல்முறையாக புலிக்கு வனத்தை மீட்டுக் கொடுக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி வழங்கப்படும். பாதுகாப்பு அரணில் அது 50 வகையான விலங்குகளை வேட்டையாடி வெல்ல வேண்டும். தற்போதுவரை முயல், குட்டி பன்றி உள்பட 6 வகையிலான விலங்குகளை வேட்டையாடியுள்ளது.

புலி
புலி

புலியை கண்காணிக்க இரண்டு வேட்டைத் தடுப்பு காவலர்கள், ஒரு வனவர் (Forester) பணியமர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அரணுக்குள் உணவு வைக்கும்போது, அவர்கள் புலி மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்வார்கள்.

உணவு கொடுக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் சி.சி.டி.வி கேமரா மூலம் புலியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மனிதர்கள் பார்வையை முற்றிலும் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஒரு பன்றியை சிறப்பாக வேட்டையாடியிருக்கிறது.

புலி
புலி

அடுத்ததாக ஒரு ஆட்டை வேட்டையாடும் சோதனை செய்யப்பட உள்ளது. ஆனால், இது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. நாட்டில் இதுவரை 20 புலிகளுக்கு இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் 5 தான் வெற்றியடைந்துள்ளது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் புலிகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இதில் அனுபவம் அதிகம். எனவே, அந்த மாநில வனத்துறையிடமும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

புலி
புலி

முக்கியமாக புலியின் பயிற்சிக்கு உதவும் வகையில், பாதுகாப்பு அரணை 2 லட்சம் சதுர அடியில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” என்றனர்.