முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு தற்போது 89 வயதாகிறது. இதற்கு முன் 2018 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனை வந்து அவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism