Published:Updated:

சுற்றுலா சொகுசுக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதா... என்ன சொல்கிறது புதுச்சேரி அரசு?!

சொகுசுக் கப்பல்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த சுற்றுலா சொகுசுக் கப்பல் புதுச்சேரிக்குள் வராமல் திரும்பிச் சென்றது.

சுற்றுலா சொகுசுக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதா... என்ன சொல்கிறது புதுச்சேரி அரசு?!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த சுற்றுலா சொகுசுக் கப்பல் புதுச்சேரிக்குள் வராமல் திரும்பிச் சென்றது.

Published:Updated:
சொகுசுக் கப்பல்

சென்னை - புதுச்சேரிக்கு இடையேயான சுற்றுலா சொகுசுக் கப்பல் போக்குவரத்தை கடந்த சனிக்கிழமை சென்னையில் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சூது உள்ளிட்ட விளையாட்டுகள் அந்தக் கப்பலில் இருப்பதால் அதை புதுச்சேரிக்கு அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, "புதுச்சேரி அரசுக்கு அது தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை. அது தொடர்பான கோப்புகளும் வரவில்லை. அப்படியே அந்தக் கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசாரச் சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.

புதுச்சேரி
புதுச்சேரி

இந்நிலையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த சொகுசுக் கப்பல், இரண்டாம் கட்ட பயணமாக விசாகப்பட்டினம் சென்று இன்று காலை 4:30 மணிக்கு புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்தது. கப்பலில் சூதாட்டம் நடைபெறுவதால் புதுச்சேரிக்குள் கப்பலை அனுமதிக்கக் கூடாது, மீறினால் கலாசாரம் சீர்குலையும் என பலரும் வலியுறுத்தும் நிலையில், "கப்பல் 12 நாட்டிக்கல் மைல் தாண்டிதான் நிற்கும். அதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை. பயணிகளை இறக்குவதற்குத்தான் அனுமதி தேவை. அதேநேரத்தில் சூதாட்டம் நடந்தால் அனுமதிக்க முடியாது" என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல 16 நாட்டிக்கல்லுக்கு மேல் சென்றால்தான் கேசினோ விளையாட்டுகளும், மதுபானங்களும் வழங்கப்படும் என கப்பல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றுவரை கப்பலுக்கு அனுமதி வழங்காத நிலையில் பயணிகள் யாரேனும் கரை இறங்கினால் போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி இறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:30 மணிக்கு வந்த கப்பல் புதுச்சேரிக்கு நுழையாமல் 8:30 மணிக்கு திரும்பிச் சென்றது. அதேபோல "புதுச்சேரியில் பயணியரை இறக்கும் திட்டமே இல்லை. மேலும் அந்த அளவுக்குப் பாதுகாப்பான எண்ணிக்கையில் படகுகள் இல்லை. நேற்று இரவு வரை சொகுசுக் கப்பல் குறித்த எந்தக் கோப்பும் வரவில்லை" என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர் தமிழிசை.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இது தொடர்பாக சுற்றுலா மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டபோது, "இதுவரை அந்தக் கப்பலுக்கு நாம் அனுமதியும் கொடுக்கவில்லை, அதைத் திருப்பியும் அனுப்பவில்லை. அந்தக் கப்பல் புதுச்சேரிக்குள் வருவதற்கு அனுமதிக்கும்படி அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இன்று காலை புதுச்சேரிக்கு வந்த அந்தக் கப்பல் தற்போது புதுச்சேரி எல்லையிலேயே நின்றுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism