Published:Updated:

`பேருந்துகளை அதிகளவு இயக்கியும் சமாளிக்க முடியவில்லை!' - ஊட்டியில் பயணிகள் கடும் அவதி

ஊட்டி பேருந்து நிலையம்
ஊட்டி பேருந்து நிலையம்

ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். அதிகளவு சிறப்புப் பேருந்துகளை இயக்கியும் சமாளிக்க முடியவில்லை.

கடந்த 14-ம் தேதி போகியுடன் தொடங்கிய பொங்கல் விழா 17-ம் தேதி வெள்ளிக்கிழமை காணும் பொங்கலுடன் முடிவடைந்தாலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறையாக அமைந்தது. இன்றுடன் பொங்கல் கொண்டாட்டம் நிறைவடைந்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கவுள்ளன. பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நகரங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால், பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகின்றன.

ஊட்டி பேருந்து நிலையம்
ஊட்டி பேருந்து நிலையம்

இதேபோல் சுற்றுலா நகரான ஊட்டியிலும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு போதுமான அளவு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். `ஊட்டி - மேட்டுப்பாளையம், ஊட்டி - கோவை, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகளை இயக்கவில்லை' எனப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் அதிக கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் பயணம் செய்தனர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சுரேஷ் கூறுகையில், ``மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாலை ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்தோம். மதியத்திலிருந்து ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம், போதிய பேருந்துகள் இயக்கவில்லை. சில பேருந்துகள் பாதி வழியில் பழுதாகி நிற்கின்றன என்கிறார்கள்.

நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசுப் பேருந்து
நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசுப் பேருந்து

இருக்கும் பேருந்துகளிலும் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலால் பயணிக்க முடியவில்லை. ஊட்டிக்கு வரும்போது இருந்த பேருந்து வசதி, திரும்பிச் செல்லும்போது இல்லை" என்றார்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள், `இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால், பொங்கல் தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

`மனிதர்கள் பொருட்டல்ல; தனியாகவே நடமாட்டம்!' - ஊட்டி வனத்துறை அதிகாரிகளைக் குழப்பும் புலிக்குட்டி

மேலும், நீலகிரி மாவட்டத்திலிருந்து சமவெளிப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர். அதிக அளவு சிறப்புப் பேருந்துகளை இயக்கியும் சமாளிக்க முடியவில்லை" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு