Published:Updated:

`வீட்டின் ஓட்டைப் பிரித்து இறங்கி, கழுத்தை நெரித்தார்!'‍-மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளி வீராங்கனை சுபஜா வீட்டுக்குள் புகுந்து, அவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Subaja
Subaja

நாகர்கோவில் காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுபஜா (26). கடந்த 2009-ல் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். மாற்றுத்திறனாளியான இவருக்கு வீட்டில் ஆதரவு இல்லை. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய சுபஜா, நண்பர்கள் உதவியோடு வாழ்ந்துவருகிறார். நெருங்கிய தோழியின் உதவியால் சிவகங்கை மாவட்டம் சக்கந்தி பகுதியில் வசித்துவருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்துவருகிறார். இதில் குறைந்த அளவே வருமானம் கிடைத்து வருகிறது.

Subaja
Subaja

தனது விடாமுயற்சியால் விளையாட்டுத்துறையில் சாதித்து வருகிறார். கூடைப்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுவருகிறார். இந்நிலையில், சுபஜா தங்கியிருக்கும் வாடகை வீட்டுபுகுந்த நபர், அவரைக் கொலை செய்ய முயன்றதாக சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சுபஜாவிடம் பேசினோம். ``கடந்த 9 ஆண்டுகளாக சக்கந்தி மில்கேட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் நேற்று கோவையில் கூடைப்பந்து விளையாட்டை முடித்துவிட்டு வந்து இரவு தூங்கிக் கொண்டிருந்தேன்.

Subaja's house
Subaja's house

இரவு 10.30 மணி அளவில் என் வீட்டில் தடதட வென்று சத்தம் கேட்டது. பூனையாக இருக்குமோ என்று லைட்டைப் போட்டுப் பார்த்தேன். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர் என்பவர், எனது வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியது தெரியவந்தது.

Vikatan

பயந்துபோய் நான் கத்தினேன். அதனால், எனது கழுத்தை நெரித்து அவர் கொலை செய்ய முயன்றார். எனது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் என்னைக் காப்பாற்றினர். தற்போது சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளேன்.

Subaja
Subaja

என்னைக் கொலை செய்ய முயன்ற சேகர், எதற்காக என் வீட்டிற்குள் அத்துமீறி வந்தார் என்று தெரியவில்லை. காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துவிடும் என மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல அவர் இப்போது நாடகமாடி வருகிறார்" என்றார் கொதிப்புடன்.