Published:Updated:

`பிறவி வளைபாத கோளாறு சரிசெய்யக்கூடியதே!' - அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச சிறப்பு காலணி

அரசு மருத்துவமனை
News
அரசு மருத்துவமனை

இந்த சிகிச்சை மையத்தில், வளைபாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மாவுக் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக் காலணிகள் இலவசமாக வழங்கப்படும். இச்செயல்பாடுகள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதவளைவு சரி செய்யப்படும்.

பிறவி வளைபாத சிகிச்சைக்காக `க்ளப் ஃபூட் ஃப்ரீ திண்டுக்கல்' (Club Foot Free Dindugul)' என்ற சிகிச்சை மையம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம், க்யூர் இந்தியா மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து, இந்த சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளன. தொடக்க நிகழ்வுக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் வீரமணி தலைமை வகித்தார்.

காலணி
காலணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இத்திட்டம் குறித்து பேசிய க்யூர் இந்தியா இயக்குநர் மருத்துவர் சந்தோஷ் ஜார்ஜ், ``2022-ம் ஆண்டில், அனைத்து பாத வளைவுள்ள குழந்தைகளையும் கண்டறிந்து சிகிக்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையின் முடநீக்கியல் துறையில் வியாழக்கிழமைதோறும் வளைபாத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு அலுமினியத்தால் ஆன பாதவிலகல் இறுக்கி என்ற காலணி தொடர்ந்து வழங்கப்படும்'' என்றார்.

இத்திட்டத்தின் தலைவர் மல்லிகா, மருத்துவர் ஷர்மிளா பாலகுரு, மருத்துவமனை ஆர்.எம்.ஓ மருத்துவர் சந்தனகுமார், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவின் தலைவர் மருத்துவர் கார்த்திக்ராஜா மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சிகிச்சை மையத்தில், வளைபாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மாவுக் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக் காலணிகள் இலவசமாக வழங்கப்படும். இச்செயல்பாடுகள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதவளைவு சரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையம் தொடங்கப்பட்ட முதல் நாளே சிகிச்சைக்காக வந்த பாத வளைவு குழந்தைகளுக்கு மருத்துவர் கார்த்திக் ராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சையைத் தொடங்கினர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ மருத்துவர் சந்தனகுமாரிடம் பேசினோம். ``பிறவி வளைபாத கோளாறு என்பது மரபின் காரணமாக வரக்கூடியது அல்ல. இது எளிதில் சரிசெய்யக் கூடியதுதான். முன்பு இப்பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது சிறப்பு காலணிகளையும், அதற்கான மருந்துகளையும் எடுத்துக் கொண்டாலே வளைபாத பிரச்னையை சரிசெய்துவிட முடியும். ஏற்கெனவே நமது மருத்துவமனையில் பிறவி வளைபாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தனியார் தொண்டு நிறுவனங்கள் எங்களுடன் சேர்ந்துள்ளனர். வளைபாத பிரச்சைக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு இலவசமாக சிறப்பு காலணிகளை அவர்கள் தொடர்ந்து வழங்க உள்ளனர்'' என்றார்.

பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பலன் சென்றடைய வேண்டும்!