Published:Updated:

திண்டுக்கல்: ரூ.150 பாக்கி - சண்டைக்களமாக மாறிய டீக்கடை!

சண்டையிட்டுக்கொள்ளும் முரளி, அம்மாவாசி
சண்டையிட்டுக்கொள்ளும் முரளி, அம்மாவாசி

டீக்கடையில் கொடுக்க வேண்டிய ரூ.150 பாக்கித் தொகையைக் கேட்க, டீக்கடைக்காரரும், டீ குடிக்க வந்த நபரும் ரோட்டில் உருண்டு சண்டையிட்டுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ளது தென்னம்பட்டி கிராமம். இங்கு பல ஆண்டுகளாக டீக்கடை நடத்திவருகிறார் முரளி. இந்தநிலையில், டீக்கடைக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர், டீ கேட்டிருக்கிறார். கடையில் இருந்த முரளியின் மனைவி, ஏற்கெனவே அம்மாவாசி கொடுக்க வேண்டிய 150 ரூபாய் பாக்கியைக் கேட்டிருக்கிறார். `பிறகு தருகிறேன்’ என அம்மாவாசி கூற, `பணத்தைக் கொடுத்தால்தான் டீ தருவேன்’ என முரளியின் மனைவி கூறியிருக்கிறார்.

சண்டையிட்டுக்கொள்ளும் முரளி, அம்மாவாசி
சண்டையிட்டுக்கொள்ளும் முரளி, அம்மாவாசி

அம்மாவாசிக்கும், முரளியின் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடைக்கு வந்த முரளி, தன்னுடைய மனைவியிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அம்மாவாசியிடம் சத்தம் போட்டு அங்கிருந்து போகச் சொல்லியிருக்கிறார்.

`சந்தேக நபரைப் புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி

அப்போதும் அம்மாவாசி தொடர்ச்சியாக வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் டீக்கடையில் இருந்த மண்வெட்டியின் கைப்பிடியை எடுத்து அம்மாவாசியின் தலையில் அடித்திருக்கிறார் முரளி. இதில், அம்மாவாசியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

சண்டையிட்டுக்கொள்ளும் முரளி, அம்மாவாசி
சண்டையிட்டுக்கொள்ளும் முரளி, அம்மாவாசி
திண்டுக்கல்: `இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி..!’ - சர்ச்சையான அமைச்சர் சீனிவாசன் பேச்சு

இதனால் ஆத்திரமடைந்த அம்மாவாசி, முரளியுடன் சண்டையிட ஆரம்பித்தார். இருவரும், ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் விலக்கிவிட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை காவல்துறையினர், இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இருவரிடமும் புகார்கள் பெற்று, இருவர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் நெட்டிசன்கள், வடிவேல் காமெடியை நினைவுபடுத்தி கலாய்த்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு