Published:Updated:

"நான் பா.ஜ.க ஆதரவாளன் இல்லை. திராவிடத் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன்!"- மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்

கே.பாக்யராஜ்

இன்று பா.ஜ.க தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

"நான் பா.ஜ.க ஆதரவாளன் இல்லை. திராவிடத் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன்!"- மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்

இன்று பா.ஜ.க தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Published:Updated:
கே.பாக்யராஜ்

இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க தலைமையில் நடைபெற்ற 'பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா - 2022' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ், "இந்தியாவிற்கு மோடி போன்றவர்கள் தேவை. மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்" என்று பேசியிருந்தார்.

மேலும் அவர், "பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள சொல்வேன். தாய் வயிற்றில் சிசுவுக்கு 4-வது மாதம் காது உருவாகும். 5-வது மாதம் வாய் உருவாகும். ஆனால் மோடியை விமர்சனம் செய்பவர்கள் 3 மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வேன்.

நூல் வெளியிட்டு விழாவில்  பாக்யராஜ்
நூல் வெளியிட்டு விழாவில் பாக்யராஜ்

ஏனென்றால் நல்லதை இவனும் பேசமாட்டான் பிறர் பேசினாலும் காது கொடுத்து கேட்கமாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் மோடி இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதில் அவர் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது அதற்கு மன்னிப்புக் கேட்டு காணொலி ஒன்றை வெளியிடுள்ளார்.

அந்தக் காணொலியில், "நான் இன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நான் குறிப்பிட்டுப் பேசிய வார்த்தை தவறான ஆர்த்தத்தை உண்டாக்கியது என்று கேள்விப்பட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். மாற்றுத் திறனாளிகள் வேறு, குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் வேறு. கிராமத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறுவார்கள் அதைத்தான் நான் கூறினேன். மாற்றுத் திறனாளிகளை நான் எப்போதும் அக்கறையுடன்தான் பார்ப்பேன். நான் பேசியது அவர்களைக் காயப்படுத்தினால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், "நான் 'பி.ஜே.பி' ஆள் கிடையாது. தமிழ்தான் எனக்கு சோறுபோட்டது. திராவிடத் தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜீவா போன்ற தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களுடைக் கருத்துகள்தான் என்னுள் ஊறிப்போய் உள்ளது. அதைப் பார்த்து வளர்ந்தவன் நான். சாதி எதிர்ப்புப் போன்ற திராவிடக் கருத்துகள்தான் என் படங்களில் அன்றிலிருந்தே இருந்துள்ளது. என் படங்களில் இது போன்ற கருத்துகள்தான் இனியும் எதிரொலிக்கும்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism