Published:Updated:

"மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்"- இயக்குநர் பாக்யராஜ்

இயக்குநர் பாக்யராஜ்

இசையமைப்பாளர் இளையராஜாவைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பாக்யராஜ் மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

"மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்"- இயக்குநர் பாக்யராஜ்

இசையமைப்பாளர் இளையராஜாவைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பாக்யராஜ் மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

Published:Updated:
இயக்குநர் பாக்யராஜ்

பிரதமர் மோடியின் ஆட்சியில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் பற்றி எழுதப்பட்ட 'பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா-2022' என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டார் இயக்குநர் பாக்யராஜ் . அப்போது பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசிய அவர் இந்தியாவிற்கு மோடி போன்றவர்கள் தேவை என்றும் 'மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்' என்றும் கூறியுள்ளார் இயக்குநர் பாக்யராஜ்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் "மோடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார். அது அவர் நாட்டிற்கு எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பதைக் காட்டுகிறது. மோடியை விமர்சனம் செய்ய எப்போதும் ஆட்கள் தாயராக உள்ளனர். இவ்வாறு மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவிற்கு மோடி போன்றவர்கள் தேவை" என்று கூறியுள்ளார். சமீபத்தில் இளையராஜா, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதையடுத்து தற்போது இயக்குநர் பாக்யராஜ் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism