Published:Updated:

``அவதூறுகளின்போது ஆதரவாக நின்ற மனிதர்களுக்கு நன்றி!" - ஷங்கர் மருமகன் ரோஹித்தின் ட்விட்டர் பதிவு!

ஷங்கர், ரோஹித்

மிகுந்த துன்பத்திலும், மன உளைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர என்னை நானே தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். - ரோஹித்

``அவதூறுகளின்போது ஆதரவாக நின்ற மனிதர்களுக்கு நன்றி!" - ஷங்கர் மருமகன் ரோஹித்தின் ட்விட்டர் பதிவு!

மிகுந்த துன்பத்திலும், மன உளைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர என்னை நானே தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். - ரோஹித்

Published:Updated:
ஷங்கர், ரோஹித்

புதுச்சேரியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் ரோஹித் என்பவருக்கும், இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரோஹித்தின் தந்தை புதுச்சேரியில் கிரிக்கெட் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். ரோஹித் அந்த கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டனாகப் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர். இந்நிலையில் கிரிக்கெட் பயிற்சிக்காக அந்த கிளப்பிற்கு வந்த 16 வயது இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய காரணத்திற்காக பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் பிரிவிலும், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரது மகன் ரோஹித் (இயக்குநர் ஷங்கரின் மருமகன்) செயலாளர் வெங்கட், உள்ளிட்டவர்கள் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாகவும் போக்சோ பிரிவின்கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியதையடுத்து நீண்ட நாட்களாக இது குறித்து எதுவும் பேசமால் இருந்த ரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ரோஹித்தின் இன்ஸ்டாகிராம் பதிவு
ரோஹித்தின் இன்ஸ்டாகிராம் பதிவு

இது குறித்து ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் ரொம்ப ஆழமாகவும், போதுமான அளவு யோசித்தும் தான், இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்து, நான் யாருன்னு எனக்கே அறிமுகப்படுத்தினதும், வாழ்வின் சிறந்த துணையாக இருப்பதும் கிரிக்கெட் தான். மேலும், என் வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கும் கிரிக்கெட்டுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களால், எனக்கான துறையில் எனது மன அமைதியையும், அதற்கான மதிப்பையும் இழந்திருக்கிறேன். இதனால் மிகுந்த துன்பத்திலும், மன உளைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர என்னை நானே தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனவே தற்காலிகமாகக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன்.

இத்தனை அவதூறுகளிலும் எனக்கு ஆதரவாக நின்ற மனிதர்களுக்கு, எனது நன்றிகள். நான் மீண்டும் சரியான நேரத்தில் வருவேன். என்னை உருவாக்கிய கிரிக்கெட்டிற்கும், என்னை நம்பி என்னுடன் நின்றவர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்" என்று பதிவிட்டுள்ளார்.