Published:Updated:

அரசுப் பள்ளி: அறுந்து விழுந்த மின்கம்பி; அலட்சியம் காட்டிய தலைமையாசிரியர் - எச்சரித்த ஆட்சியர்!

அரசுப் பள்ளி

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்ட தலைமையாசிரியரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்திருக்கிறார்.

அரசுப் பள்ளி: அறுந்து விழுந்த மின்கம்பி; அலட்சியம் காட்டிய தலைமையாசிரியர் - எச்சரித்த ஆட்சியர்!

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்ட தலைமையாசிரியரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்திருக்கிறார்.

Published:Updated:
அரசுப் பள்ளி

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் மேலக்காசாக்குடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டட ஒப்பந்ததாரருக்கு சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் வைப்பதற்கு இட வசதியோ, தண்ணீர் வசதியோ தர மறுத்துவிட்டாராம் தலைமையாசிரியர் பரமசிவம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டடம் அமைக்க ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியிருக்கின்றனர்.

மாணவ, மாணவிகள்
மாணவ, மாணவிகள்

அப்போது, பள்ளிக்குச் செல்லும் மின்சார கேபிள் அறுந்து விழுந்திருக்கிறது. அதில் மின்சாரம் தாக்கி டிரைவர், கிளீனர் தூக்கி எறியப்பட்டனர். கட்டுமான வேலை பார்த்தவர்களுக்கும் ஷாக் அடித்திருக்கிறது. இது குறித்து உடனடியாக பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவத்தை கிராமவாசிகள் தொடர்புகொண்டிருக்கிறார்கள். ஆனால், ``தலைமையாசிரியரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை" என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஈரம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் செல்வம் நம்மிடம் பேசினார். ``தலைமையாசிரியரிடமிருந்து சாவி கிடைக்காததால் கிராமவாசிகளே ஜன்னல் வழியாக மின் இணைப்பை நிறுத்தி, அங்கு கட்டுமான வேலை செய்த சுமார் 15 தொழிலாளர்களை மீட்டோம். அதன் பிறகு தாமதமாக அங்கு வந்த தலைமையாசிரியர் பரமசிவம், எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கூடத்தின் நுழைவு காம்பவுண்டு கேட்டையும் பூட்டி, அந்தச் சாவியையும் வாட்ச்மேனிடம் தராமல் தானே எடுத்துச் சென்றுவிட்டார்.

செல்வம்
செல்வம்

நேற்று வழக்கம்போல் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக வந்த பெற்றோர் காம்பவுண்டு கேட் பூட்டிக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். ஒரு மணி நேரமாகக் காத்திருந்த மாணவ, மாணவியர் பொறுமையிழந்து காம்பவுண்டு கேட்டைத் தாண்டிக் குதித்து பள்ளிக்குள் சென்றனர்.

பள்ளிக்குள் தரையில் மின்சார கேபிள் அறுந்து கிடந்த நிலையில், மாணவ, மாணவியர் பூட்டிய கேட்டைத் தாண்டி உள்ளே சென்றதால் பதற்றமடைந்த கிராமவாசிகள் பள்ளிக்குள் சென்ற மாணவ, மாணவியரை வெளியேற்றினர். அதன் பிறகு 9:15 மணிக்கு தலைமையாசியர் வந்தார். பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

எனவே பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட தலைமையாசிரியர் பரமசிவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் கிராமவாசிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்" என்றார்.

முகமது மன்சூர் கலெக்டர், காரைக்கால்
முகமது மன்சூர் கலெக்டர், காரைக்கால்

இந்தச் சம்பவம் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் விளக்கம் கேட்டோம். ``எனக்குத் தகவல் கிடைத்தவுடனேயே மேலக்காசாக்குடி நடுநிலைப்பள்ளிக்கு விசிட் செய்து தீர விசாரித்தேன். இந்த அசம்பாவிதங்களுக்கு தலைமையாசிரியரின் அஜாக்கிரதையும், கவனக்குறைவும்தான் காரணம். அவருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறோம். இனி இத்தகைய தவறுகள் நடக்காது" என்றார்.