Published:Updated:

தலைமையிடமிருந்து அழைப்பு... முதல்வரிடம் கண்ணீர்விட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திப்பம்பட்டி ஆறுச்சாமி

பதவி விலகிய திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி ஆறுச்சாமியை அழைத்துப் பேசியிருக்கிறார் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

தலைமையிடமிருந்து அழைப்பு... முதல்வரிடம் கண்ணீர்விட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி!

பதவி விலகிய திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி ஆறுச்சாமியை அழைத்துப் பேசியிருக்கிறார் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

Published:Updated:
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திப்பம்பட்டி ஆறுச்சாமி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் பதவியில் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கோவைக்கு வந்தபோது, பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் கூட்டம் நடந்தது.

முதல்வர் கலந்துகொண்ட கூட்டம்
முதல்வர் கலந்துகொண்ட கூட்டம்

இதில் திப்பம்பட்டி ஆறுச்சாமியும் கலந்துகொண்டார். மாநில நிர்வாகியாக இருந்தும் அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், “சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை ஊட்டிய திமுக-விலேயே அது கிடைக்கவில்லையென்றால் எங்கு போக முடியும்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், திமுக தலைமை அவரை சென்னைக்கு அழைத்துள்ளது. அங்கு ஸ்டாலின் மற்றும் அன்பகம் கலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து பேசியிருக்கிறார் ஆறுச்சாமி.

திப்பம்பட்டி ஆறுச்சாமி
திப்பம்பட்டி ஆறுச்சாமி

``உங்களது வருத்தத்தை எங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான இயக்கம். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.

ஸ்டாலினைக் கண்டவுடன் ஆறுச்சாமி கண்ணீர்விட்டுள்ளார். ஸ்டாலின், “என்ன ஆச்சு?” என்று கேட்டிருக்கிறார். உடனே ஆறுச்சாமி நடந்ததைக் கூறியிருக்கிறார். ``நான் உங்களை அங்கே பார்த்தேனே... சரி விடுங்க பார்த்துக்கலாம்” என ஆறுச்சாமியின் தோளில் தட்டி ஆறுதல் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின். மேலும், அவரின் பதவி விலகல் கடிதத்தையும் தலைமை ஏற்க மறுத்துவிட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதனால் ஆறுச்சாமி நெகிழ்ந்துபோயிருக்கிறார். இதற்கிடையே, “இந்த விவகாரத்தை கையிலெடுக்க பாஜக முயன்றது. அதற்குள் அலர்ட்டாகி திமுக தலைமை அதற்கு செக் வைத்துவிட்டது” என உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.