Published:Updated:

`அழைப்பு வந்த ஒரு மணி நேரத்தில் உதவி!’ - தஞ்சை உடன்பிறப்புகளின் `ஹெல்ப்லைன்’ சேவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டுக்கே சென்று உதவும் தி.மு.க-வினர்
வீட்டுக்கே சென்று உதவும் தி.மு.க-வினர்

எங்கள் பணியை உதயநிதியின் நேரடி கவனத்திற்கு செல்வதால் எங்களின் நலன் பற்றியும் அக்கறையுடன் விசாரிக்கிறார். அத்துடன் எங்களை பற்றி இணைய தளங்கள் வழியாக பாராட்டி வருவது எங்களை போன்ற நிர்வாகிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை தருவதாக உள்ளது`

கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் பல குடும்பங்கள் ஹெல்ப் லைன் மூலம் உதவி கேட்டு போன் செய்த ஒரு மணிநேரத்தில் வீட்டுக்கே சென்று தஞ்சாவூர் தி.மு.க இளைஞரணியை சேர்ந்தவர்கள் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

சண்.ராமநாதன்
சண்.ராமநாதன்

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் தொடங்கி பலரும் வருமானத்தை இழந்துள்ளதால் பெரும் பொருளாதார பாதிப்புக்குள்ளாகி தவித்து வருகின்றனர். இதையடுத்து சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தி.மு.க இளைஞரணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஹெல்ப் லைன் மூலம் தங்களிடம் உதவி கேட்டு போன் செய்பவர்களுக்கு அடுத்த ஒரு மணிநேரத்தில் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்ளை அவர்களின் வீட்டுக்கே சென்று கொடுத்து வருகிறார்கள்.

`அழைப்பு வந்த ஒரு மணி நேரத்தில் உதவி!’ - தஞ்சை உடன்பிறப்புகளின் `ஹெல்ப்லைன்’ சேவை

இதுகுறித்து தி.மு.க-வின் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சண்.ராமநாதனிடம் பேசினோம். `` மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முகநூல் மூலம் பேசியதுடன் ஹெல்ப் லைனுக்கான செல்நம்பர் ஒன்றை அறிவித்து ஊரடங்கால் வருமானமின்றி தவிப்பவர்கள் இந்த நம்பருக்குத் தொடர்பு கொண்டால் வேண்டிய உதவிகள் செய்யப்படும் என அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 3,000 அழைப்புகள் வந்தன. இவற்றை மாவட்டவாரியாக பிரித்து அதன் விபரங்களை அந்தந்த இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எங்களிடம் உதவி கோரியவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கினோம். அதன் பின்னர் ஹெல்ப் லைனுக்கு வரும் தொடர்புகள் எங்களுக்கு வருவதுபோல் மாற்றியமைக்கப்பட்டது.

`அழைப்பு வந்த ஒரு மணி நேரத்தில் உதவி!’ - தஞ்சை உடன்பிறப்புகளின் `ஹெல்ப்லைன்’ சேவை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 331 குடும்பங்களுக்கு தேவையான பொருள்கள் கொடுத்து முடித்து விட்டோம். 6 நபர்கள் கொண்ட குடும்பமாக இருந்தால் 10 கிலோ அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய பொருள்கள், மூன்று நபர்கள் கொண்ட குடும்பமாக இருந்தால் 5 கிலோ அரிசியுடன் கூடிய பொருள்கள் என 15 நாட்களுக்கு தேவையானவை கொடுக்கபடுகின்றன.

இன்னும் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அழைப்பு வந்த ஒரு மணி நேரத்தில் அவர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்கப்பட்டு வருவது பயனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. பூக்காரத் தெருவை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் கடைகளுக்கு சென்று பொருள் வாங்க முடியாத சூழல். ஊரடங்கால் போக்கு வரத்து நிறுத்தபட்டிருப்பதால் உதவிக்கு உறவினர்கள் யாரும் வரமுடியாததால் அந்த பெண் மட்டும் தனியாக இருக்கிறார்.

தி.மு.கவினர்
தி.மு.கவினர்

அருகில் வீடுகள் இல்லாததால் பொருள்களை வாங்கி கொடுப்பதற்கு உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை பணம் இருந்தும் பொருள் வாங்க முடியாமல் அவர் தவிக்க அவருடைய கணவர் வெளிட்டில் இருந்து கொண்டு எங்களுக்கு போன் செய்து உதவி கோரினார். நாங்க உடனே அவர் வீட்டிற்கு சென்று உதவி பொருட்களை கொடுத்து வந்ததுடன் வேறு ஏதேனும் உதவி தேவைபட்டால், `அண்ணங்க நாங்க இருக்கோம் எப்ப வேணாலும் கூப்பிடும்மா’ என கூறிவிட்டு வந்தோம்.

மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளை வைத்து கொண்டு கணவன் இல்லாமல் தவிக்கும் பெண்கள்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என பலருக்கு உதவி வருகிறோம். மாற்று திறனாளி ஒருவர் அழைக்க அவருக்கு பொருள்கள் கொண்டு கொடுத்தோம். முகம் முழுக்க புன்னகையுடன் அதை பெற்று கொண்ட அவர் சும்மா ஒரு விளம்பரத்திற்காக இதை செய்வதாக சொல்லி யிருப்பாங்க என நினைத்து கொண்டு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போன் செய்தேன். ஆனால் பொருள் கைக்கு வந்துவிட்டது. உதயநிதியை சினிமாவில் தான் ஹீரோ என நினைத்தேன. நிஜ வாழ்கையிலும் ஹீரோவாக இருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

`லாக்டவுனில் நாம் செய்யும் உதவி!'-செஞ்சோற்றுக் கடன் கதை #MyVikatan

களத்தில் செயலாற்றும் எங்கள் பணியை உதயநிதியின் நேரடி கவனத்திற்கு செல்வதால் எங்களின் நலன் பற்றியும் அக்கறையுடன் விசாரிக்கிறார். அத்துடன் எங்களை பற்றி இணைய தளங்கள் வழியாக பாராட்டி வருவது எங்களை போன்ற நிர்வாகிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை தருவதாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு