Published:Updated:

``தி.மு.க அத்தியாயம் ஸ்டாலினோடு முடிவடைகிறது” - சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

``திமுக அத்தியாயம் என்பது ஸ்டாலினோடு முடிவடைகிறது. சின்னவர் என்பவர் திமுக-வை வழிநடத்த மாட்டார்” - ஹெச்.ராஜா

``தி.மு.க அத்தியாயம் ஸ்டாலினோடு முடிவடைகிறது” - சொல்கிறார் ஹெச்.ராஜா

``திமுக அத்தியாயம் என்பது ஸ்டாலினோடு முடிவடைகிறது. சின்னவர் என்பவர் திமுக-வை வழிநடத்த மாட்டார்” - ஹெச்.ராஜா

Published:Updated:
ஹெச்.ராஜா

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜனதா கட்சி சார்பில் கபடிப் போட்டி நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திடீரென வேட்டியை மடித்துக் கட்டி, களத்தில் இறங்கி கபடியும் ஆடினார். மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பனுடன் மல்லுக்கட்டினார். இது அங்கிருந்த பாஜக-வினர் அனைவரையும் உற்சாகமடையச் செய்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ''இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். தி.மு.க ஆட்சியில் சாலைகள் சரிவரப் போடப்படுவது கிடையாது.

``தி.மு.க அத்தியாயம் ஸ்டாலினோடு முடிவடைகிறது” - சொல்கிறார் ஹெச்.ராஜா

பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. இதை திசைதிருப்புவதற்காகத்தான் ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் தூண்டிவிடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெரியார் வழிக்கு பிரதமர் மோடி வந்தால் வரவேற்கிறோம் என்று திருமாவளவன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கும் திட்டங்களைத் தவிர, வேறு எந்தத் திட்டமும் தமிழகத்தில் நடைபெறவில்லை. வக்பு வாரிய சட்டத்தை வைத்துக்கொண்டு தற்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஒரு இன்ச் இடத்தைக்கூட அவர்களுக்கு வழங்க பாஜக அனுமதி அளிக்காது. திமுக அத்தியாயம் என்பது ஸ்டாலினோடு முடிவடைகிறது. சின்னவர் என்பவர் திமுக-வை வழிநடத்த மாட்டார்" என்றார்.