Published:Updated:

காஞ்சிபுரம்: படுகொலைசெய்யப்பட்ட திமுக கவுன்சிலர்! - போலீஸ் தேடும் பெண் யார்?

கொலைசெய்யப்பட்ட கவுன்சிலர் சதீஷ்

தாம்பரம் அருகே திமுக கவுன்சிலர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். போலீஸார் அவர் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: படுகொலைசெய்யப்பட்ட திமுக கவுன்சிலர்! - போலீஸ் தேடும் பெண் யார்?

தாம்பரம் அருகே திமுக கவுன்சிலர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். போலீஸார் அவர் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட கவுன்சிலர் சதீஷ்

சென்னை, தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம், எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். (30). இவர், நடுவரப்பட்டு ஊராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலர். திமுக-வைச் சேர்ந்த சதீஷ், கட்சி மேலிடத்துடன் செல்வாக்குடன் இருந்து வந்தார். இந்த நிலையில் சதீஷ், கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடப்பதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சதீஷைக் கொலைசெய்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை
கொலை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கவுன்சிலர் சதீஷ், தான் குடியிருக்கும் பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியிருக்கிறார். அதனால் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சதீஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் தரப்பு, கவுன்சிலர் சதீஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இந்தச் சூழலில்தான் சதீஷ் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரின் கொலை குறித்து விசாரித்தபோது மிரட்டல் விடுத்த பெண் உட்பட அவரின் தரப்பு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதனால் அவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் அந்தப் பெண் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்தோம். ``கவுன்சிலர் சதீஷ் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தேடப்படும் பெண் மதுவிற்பனை, பாலியல் தொழில் என சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு காவல்துறையிலிருக்கும் சில கறுப்பு ஆடுகள் மறைமுகமாக உதவி செய்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணின் சமூகவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கவுன்சிலர் சதீஷ் சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தியதோடு காவல் நிலையத்திலும் புகாரளித்தார். அதனால் அந்தப் பெண்ணுக்கும் சதீஷுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சதீஷிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த அந்தப் பெண் தரப்பு அழைத்துள்ளது. அங்கு சென்ற இடத்தில்தான் கவுன்சிலர் சதீஷ் கொலைசெய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் சிக்கினால்தான் கவுன்சிலர் சதீஷ் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்

தி.மு.க கவுன்சிலர் சதீஷ் குறித்து விசாரித்தபோது, ``கேபிள் டிவி ஆபரேட்டராக சதீஷ் இருந்து வந்தார். அதனால் ஏரியாவில் அவருக்கு நல்ல அறிமுகம் இருந்து வந்தது. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அம்மா, சகோதரியுடன் வசித்து வந்தார். இந்தச் சூழலில்தான் கவுன்சிலர் சதீஷ் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார். அநியாயத்தை தட்டிக்கேட்டதற்காக கவுன்சிலர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது" என்றனர் சதீஷிக்கு வேண்டப்பட்டவர்கள்.

கவுன்சிலர் சதீஷ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.