Published:Updated:

``அம்மா உணவகத்தில் கொள்ளையடிக்கிறார்கள்?!” - சென்னை மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஆவேசம்

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேயர் பிரியா

``மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் சரியாக நடப்பதில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்" - திமுக கவுன்சிலர்

``அம்மா உணவகத்தில் கொள்ளையடிக்கிறார்கள்?!” - சென்னை மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஆவேசம்

``மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் சரியாக நடப்பதில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்" - திமுக கவுன்சிலர்

Published:Updated:
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம்  ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று (அக்.28) நடைபெற்றது. மன்ற கூட்டத்தில் பேசிய 138வது வார்டு திமுக உறுப்பினர் கண்ணன், ``கடந்த கால ஆட்சியிலிருந்த அதிகாரிகளை மாநகராட்சி இதுவரை மாற்றவில்லை. குறிப்பாக, சுகாதாரத்துறையில் ஒரு எஸ்.ஓ வை கூட மாற்றவில்லை. இரண்டு வார்டுக்கு ஒரு ஏ.சி-ஐ நியமனம் செய்திருப்பதால் அவரால் பணியைச் சரிவர செய்ய முடிவதில்லை. இதேபோல், என்னுடைய வார்டில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து நான் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தேன். காலை 6 மணிக்கு வரவேண்டிய பணியாளர்கள் 10 மணிக்கும், 12 மணிக்கு வருகிறார்கள்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

சாப்பாடு சாப்பிட வருபவர்களுக்கு 100 டோக்கன்கள் மட்டுமே சுழற்சி முறையில் கொடுக்கிறார்கள். சாப்பாடு செலவாக 5 கிலோ அரிசி, பருப்பு செலவு செய்வதாகக் கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், 3 கிலோ மட்டுமே உணவு  சமைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். மீதி 2 கிலோவை வீட்டிற்கு எடுத்துச்சென்றுவிடுகிறார்கள். இதுபற்றி டி.ஆர்.ஓ-க்கு புகார் அளித்த போது, குழுவாக இவர்கள் வேலை செய்வதால் தனிப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார். அம்மா உணவக ஊழியர் ஒருவர் தப்பு செய்யும் போது அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சட்டம் எதற்கு?.

கண்ணன்
கண்ணன்

அம்மா உணவகத்தில் கொள்ளையடிக்கிறார்கள். நிறைய அம்மா உணவகங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதேபோல், மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்களை  மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மக்கள் பிரச்னைகள் நிறைய இருப்பதால் நிதிகள் செலவழிப்பது அதிகமாகிறது. எனவே, அடுத்த முறை எங்களைக் கலந்தாலோசித்து விவரங்களை வெளியிட வேண்டும். தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு ரூ.500 கோடிதான் ஒதுக்கியுள்ளது. இதுபோதாது, அடுத்தமுறை ரூ.2 ஆயிரம் கோடி, அல்லது ரூ.3 ஆயிரம் கோடி எனக் கேட்டு வாங்குங்கள்" என்றார். 

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

மேயர் பிரியா, "தற்போது மழைக் காலம் ஆரம்பித்திருப்பதால் அதிகாரிகள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை மாற்றும் போது மழைநீர் வடிகால்  பணிகளை  சீக்கிரம் முடிப்பதற்குச் சிக்கல்கள் ஏற்படும். எனவே,  ஜனவரிக்குப் பின்னர் அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உணவகங்களிலும்  டோக்கன்  நடைமுறை கொண்டுவரப்படும். ஆதாரப்பூர்வ புகார்கள் எதாவது இருந்தால் அதை எங்களிடம் சொல்லலாம். ஒருவர் செய்யும் தவறுக்கு மொத்த குழுவையே மாற்ற வேண்டும் என்றில்லை. தவறு செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

பிரியா
பிரியா

அப்போது குறுக்கிட்டுப் பேசிய உறுப்பினர் கண்ணன், "இதேபோல், மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் சரியாக நடப்பதில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு மேயர் பிரியா, "தூர்வாருவது சரியில்லை என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த பணியில் மாநகராட்சி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. உங்கள் வார்டில் சரியாக நடைபெறவில்லையென்றால் பணியை மீண்டும் செய்யச் சொல்கிறோம்" என்றார்.