Published:Updated:

சிவகங்கை: `கீழடிப் பெருமையை மறைப்பவர்களுக்கு, தமிழர் ஓட்டு மட்டும் வேண்டுமா?! - ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

`கீழடியின் அடையாளங்களையும், பெருமையையும் மறைத்த பா.ஜ.க-வுக்கு தமிழர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?’ என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் என்.வைரவன்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்த தி.மு.க மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன் வரவேற்புரை வழங்கினார். பின்னர் மு.க.ஸ்டாலின் மேடையில், ``முல்லைப்பெரியாறு தண்ணீர் சிவகங்கை மாவட்டம், கடைமடைப் பகுதிக்கும் கொண்டுவரப்படும். அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக வாழ வேண்டும் என கலைஞர் கொண்டுவந்த பெரியார் சமத்துவபுரம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

ஸ்டாலின் மக்கள் சந்திப்பு
ஸ்டாலின் மக்கள் சந்திப்பு

2,000 மினி கிளினிக்குகளைத் தொடங்குவதாகச் சொன்னார்கள். அதற்கான டாக்டர்கள், செவிலியர்களை வேலைக்கு எடுத்தீங்களா? விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய பழனிசாமி, கூச்சம் இல்லாமல் தானும் விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு விவசாயி என்கிறார். `என்ன செய்திருக்கிறீர்கள் என ஸ்டாலினிடம் கேளுங்கள்...’ என்று மக்களிடம் சொல்கிறார் பழனிசாமி. யார் ஆட்சியில் இருக்கிறார் என்று சிந்திக்கும் திறன்கூட இல்லாதவர். தமிழன விரோத மத்திய அரசு பா.ஜ.க-வுடன் சுயநலத்துக்காக அ.தி.மு.க அரசு கூட்டணி வைத்திருக்கிறது.

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

சொந்தக் கட்சியிலேயே மரியாதை இல்லாத பழனிசாமியை அனைவரும் புறக்கணிக்கத் தயாராகிவிட்டனர். மக்கள் வரிபணம் ஆயிரம் கோடியை விளம்பரத்துக்காகச் செலவு செய்கிறார். சசிகலா காலைப் பிடித்து பதவிக்கு வந்த பழனிசாமி, மக்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார். இப்படிப்பட்ட மண்குதிரையை நம்பி கட்சி, ஆட்சி நடத்த முடியாது.

கீழடி குறித்து ஸ்டாலின் பேச்சு
கீழடி குறித்து ஸ்டாலின் பேச்சு

கீழடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் ஆதாரங்கள் வெளிவந்தன. அந்த முயற்சிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டார். பின்னர் வந்த மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் கீழடியைப் புறக்கணித்தனர். அதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் தமிழக தொல்லியல்துறை கீழடியில் ஆய்வு செய்கிறது.

இதே வட மாநிலங்களில், இப்படியான விஷயங்கள் கிடைத்திருந்தால் பா.ஜ.க அரசு இவ்வாறு சும்மா இருந்திருக்குமா? மத்திய தொல்லியல்துறை ஆய்வு மேற்கொண்டால்தான் உலக அரங்கில் தமிழர்களின் பெருமை வெளிப்படும். ஆனால், அதை பா.ஜ.க அரசு தடுக்கிறது. கீழடியில் மத்திய தொல்லியல்துறை நடத்திய ஆய்வு முடிவுகளை தற்போதுவரை வெளியிடவில்லை. தமிழர்களின் பெருமை வெளியே செல்லக் கூடாது. ஆனால், தமிழர்களின் ஓட்டு மட்டும் பா.ஜ.க-வுக்கு வேண்டுமா” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு