Published:Updated:

`சிம்பிளாக பழகுவார்.. நல்ல மனிதர்!' -கொரோனாவால் உயிரிழந்த பாளையங்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ மகன்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நெல்லையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மொய்தீன் கானின் மகனான சென்னை தொழிலதிபர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏ. மொய்தீன் கான் மகனுக்கு, கடந்த 12-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 55 வயதான அவர், சென்னை மயிலாப்பூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து பிசினஸ் செய்துவந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

லோக்பால் உறுப்பினர் ஏகே திரிபாதி மரணம்... நீதித்துறையைக் கலங்கவைத்த கொரோனா!
கொரோனா தொற்று
கொரோனா தொற்று
சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதுதான் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது எனத் தெரியவில்லை. அவரின் அப்பா அமைச்சராக இருந்தபோதுகூட, பந்தா இல்லாமல் சிம்பிளாக எல்லோரிடமும் பழகுவார். ரொம்பவே நல்ல மனிதர். யார் உதவி என்று கேட்டாலும் உடனடியாகச் செய்வார்.
குடும்ப நண்பர்

சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொய்தீன் கான் எம்.எல்.ஏ-வின் மகனை சிறப்பு வார்டில் அனுமதித்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், அவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், எம்.எல்.ஏ-வின் மகனுக்கு நேற்றிரவு மூச்சுதிணறல் அதிகமானது. அதன்காரணமாக, சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். இதையடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைக் கேள்விபட்டதும், அவரின் தந்தை கதறி அழுதார். மொய்தின் கான் எம்.எல்.ஏ-வின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அவரின் சடலத்தை சென்னை ராயப்பேட்டையில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.

`பிளாட்பார ஆயாவிடம் பதுக்கப்பட்ட, கொள்ளையடித்த பணம்!' - போலீஸில் சிக்கிய வடசென்னை `left' மதன்
கொரோனா
கொரோனா

இதையடுத்து, மொய்தீன் கான் எம்.எல்.ஏ-வின் மகனான தொழிலதிபரின் சடலம், உலக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட எம்.எல்.ஏ-வின் மகனின் சடலம், இன்று மாலை ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

மொய்தின் கான் எம்.எல்.ஏ-வின் குடும்ப நண்பர் ஒருவரிடம் பேசினோம். ``நெல்லை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியில் வெற்றிபெற்ற மொய்தின் கான் எம்.எல்.ஏ, அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவரின் மகன், சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து மிளகாய் வத்தல் ஏற்றுமதி செய்துவந்தார். ராமநாதபுரத்திலிருந்து மிளகாய் வத்தலை வாங்கி இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதுதான் அவரின் முக்கிய பிசினஸ்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மொய்தின் கான் எம்.எல்.ஏ-வின் மகனான தொழிலதிபருக்கு 2 மகள்கள். ஒருவர் மருத்துவராக உள்ளார். இன்னொருவர் கல்லூரியில் படித்து வருகிறார். மருத்துவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தேதி முடிவு செய்யவில்லை. இந்தச் சமயத்தில், வீட்டுக்குள்ளேயே இருந்த தொழிலதிபருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது.

சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதுதான் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது எனத் தெரியவில்லை. அவரின் அப்பா, அமைச்சராக இருந்தபோதுகூட, அந்த பந்தா இல்லாமல் சிம்பிளாக எல்லோரிடமும் பழகுவார். ரொம்பவே நல்ல மனிதர். யார் உதவி என்று கேட்டாலும் உடனடியாகச் செய்வார். அவருக்கு இப்படியொரு மரணம் என்பதைக் கேள்விபட்டதும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கொரோனா மரணம் (Representative Image)
கொரோனா மரணம் (Representative Image)
AP

எங்கள் எல்லோரையும்விட அவரின் அப்பா, ரொம்பவே மனமுடைந்துவிட்டார். ராயப்பேட்டையில் நடந்த இறுதி அஞ்சலியின்போது, தொழிலதிபரின் மனைவியும் மகளும் தூரத்திலிருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதை, என்னால் பார்க்க முடியவில்லை. கொரோனாவின் விபரீதத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றார் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு