Published:Updated:

``கட்டடத்தில் காது வைத்து கேட்டேன்; ஆபத்து புரிந்தது!'' - அருவாக்குளம் மக்களைக் காப்பாற்றிய தனியரசு

இடிபாடுகளை அகற்றும் பணி
News
இடிபாடுகளை அகற்றும் பணி

``ஒரு நற்செயல் செய்து கட்சித் தலைவரிடம் பாராட்டு வாங்கும் சந்தோஷமே தனிதான். முதல்வர் பாராட்டும்போது, `உன்னை போல் நிறைய பேர் உருவாக வேண்டும்' என்று குறிப்பிட்டார். அதற்கு என்னாலான முயற்சிகளை நிச்சயம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்." - தனியரசு

சென்னை திருவொற்றியூரில் 1995-ல் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பு அண்மையில் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 24 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமான நிலையில், 100-க்கும் மேற்பட்ட மக்கள் எந்தவிதக் காயமும் இன்றி உயிர் தப்பினர். அங்கு வசித்தவர்களை முன்னெச்சரிக்கையாக வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் திருவொற்றியூர் அருவாக்குளம் பகுதி திமுக செயலாளர் தனியரசு. இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனியரசை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இடிந்து விழுந்த கட்டடம்
இடிந்து விழுந்த கட்டடம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சம்பவம் குறித்து தனியரசுவிடம் பேசினோம். ``டிசம்பர் 27-ம் தேதி காலை 8.30 மணியளவில் `சுவர் விரிசல் விட்டுருக்கு வந்து பாருங்க' என்று எங்கள் பகுதி பெண்கள் சிலர் வந்து என்னிடம் தெரிவித்தார்கள். அந்தக் குடியிருப்பில் மொத்தம் 336 வீடுகள் உள்ளன. அவற்றில் மூன்று தளம், 24 வீடுகள் கொண்ட ஒரு தனிக்கட்டடத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்தக் கட்டடத்துக்குப் போய் மூன்றாம் மாடி தொடங்கி எல்லா தளங்களிலும் ஹால், பாத்ரூம், கிச்சன் என்று ஓரிடம் விடாமல் பரிசோதித்தேன். இதைப் பார்த்துவிட்டு தரைதளத்துக்கு வருவதற்குள் கட்டடம் மெள்ள பூமிக்குள் புதையத் தொடங்கியது. ஒருபுறத்திலிருந்து மண் கொட்டிக் கொண்டிருந்தது.

தனியரசு
தனியரசு

மண் கொட்டிக்கொண்டிருந்த சுவரில் காது வைத்துக் கேட்டபோது, அதிர்வான ஒரு சத்தம் கேட்டது. அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இன்னும் சில நிமிடங்களில் இந்தக் குடியிருப்பு சரியப்போகிறது என்று. உடனே ஒவ்வொரு வீடாக சென்று கட்டடம் இடியப்போகிறது என்று சொல்லாமல், மக்களை உடனே வெளியில் வரச்சொன்னேன். வீடு இடியப்போகிறது என்று சொன்னால் மக்கள் தங்கள் உடைமைகளையும் விலை உயர்ந்த பொருள்களையும் பாதுகாக்க வேண்டுமே என்று பதற்றமடைவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீரென்று வெளியே வரச் சொன்னதால் பலர் அதற்கு மறுத்தனர். கிட்டத்தட்ட 70 பேரை திட்டித்திட்டியே வெளியே வர வைத்தேன். அனைவரையும் பிடித்து வெளியேற்றிய சில விநாடிகளில் கண் முன்னே அந்தக் கட்டடம் சீட்டுக்கட்டு போல சரிந்தது. அதைப் பார்த்தபோது அதிர்ச்சியில் மூச்சடைத்து உட்கார்ந்துவிட்டேன். அதற்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினோம். இந்த விஷயத்தை அறிந்த முதல்வர் என்னை அழைத்துப் பாராட்டினர்.

இடிந்து விழுந்த குடியிருப்பு
இடிந்து விழுந்த குடியிருப்பு

ஒரு நற்செயல் செய்து கட்சித் தலைவரிடம் பாராட்டு வாங்கும் சந்தோஷமே தனிதான். முதல்வர் பாராட்டும்போது, `உன்னை போல் நிறைய பேர் உருவாக வேண்டும்' என்று குறிப்பிட்டார். அதற்கு என்னாலான முயற்சிகளை நிச்சயம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த விபத்தில் வீடிழந்த மக்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணமும் அதே இடத்தில் வீடு கட்டித்தரவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.