Published:Updated:

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிப்பு - பதவி விலகிய திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில நிர்வாகி

முதல்வருடன் திப்பம்பட்டி ஆறுச்சாமி

``சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட ஒரே கட்சி திமுகதான். கட்சிதான் சுயமரியாதையை ஊட்டியது. அது இந்த இயக்கத்திலேயே கிடைக்கவில்லை என்றால், தொண்டன் எங்கே போய் சொல்ல முடியும்” - திப்பம்பட்டி ஆறுச்சாமி

முதல்வர் கூட்டத்தில் புறக்கணிப்பு - பதவி விலகிய திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில நிர்வாகி

``சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட ஒரே கட்சி திமுகதான். கட்சிதான் சுயமரியாதையை ஊட்டியது. அது இந்த இயக்கத்திலேயே கிடைக்கவில்லை என்றால், தொண்டன் எங்கே போய் சொல்ல முடியும்” - திப்பம்பட்டி ஆறுச்சாமி

Published:Updated:
முதல்வருடன் திப்பம்பட்டி ஆறுச்சாமி

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் இருப்பவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி தான் அவரின் சொந்த ஊர். கடந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை வந்தபோது, பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் கூட்டம் நடந்தது. அதில் ஆறுச்சாமியும் கலந்து கொண்டார்.

திப்பம்பட்டி ஆறுச்சாமி
திப்பம்பட்டி ஆறுச்சாமி

மாநில நிர்வாகியாக இருந்தும் அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆறுச்சாமி அதிருப்தியடைந்தார். இந்நிலையில் குடும்பச் சூழ்நிலை காரணமாக, திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஸ்டாலினுக்கு ஆறுச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து திப்பம்பட்டி ஆறுச்சாமி கூறுகையில், “எங்கோ குப்பையில் இருந்த எனக்கு முகவரி கொடுத்தது திமுக தான். 45 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இப்போது எனக்கு வயது 61. திமுக தவிர வேறு எதுவும் தெரியாது. 2 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன். 150க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. எனது சொந்த அண்ணன் திமுகவுக்கு வேலை செய்தார் என்பதற்காக, ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டவர்.

விலகல் கடிதம்
விலகல் கடிதம்

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் எங்கள் பகுதிதான். அவர்களை தான் எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். பலமுறை எம்.எல்.ஏ, எம்.பி சீட் கேட்டு பார்த்துக் கிடைக்கவில்லை. அதற்காக நான் கட்சியில் இருந்து விலகவில்லை.

முதல்வர் கலந்து கொண்ட நிகழ்வில் மாநில நிர்வாகிகள் யாரையும் மேடையாற்றாவிடின் கவலைப்பட்டிருக்க மாட்டேன். மற்ற மாநில நிர்வாகிகள் எல்லாம் மேடையில் உட்காந்திருந்தனர். முதல் நாளே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. அடுத்தமுறை தலைவர் வரும்போது இருப்பேனா இல்லையா என தெரியாது என்றேன். அதற்கு அவர், ‘ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

முதல்வர் கலந்து கொண்ட நிகழ்வு
முதல்வர் கலந்து கொண்ட நிகழ்வு

கூட்ட நிகழ்வில் மீண்டும் கேட்டபோது, `வாய்ப்பு இல்லை’ என்று சொன்னார். தலைவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி எம்.பி கைகாண்பித்து கூப்பிட்டார். நானும், இன்னொரு மாநில நிர்வாகியும் சென்றோம். என்னைப் பார்த்து எம்.பி, ‘உன்னைய மேல கூப்பிடலை’ என்று ஒருமையில் பேசி சென்றுவிட்டார்.

தலைவர் வந்ததும் மேடை ஏற சென்றேன். `மந்திரி உங்களை வேண்டாம் என சொல்லிவிட்டார்.’ என்று கூறினர். அந்த நேரத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்யலாமா என யோசித்தேன். உட்கார அனுமதிக்காவிடினும், கடைசிக்கு மேடையில் நிற்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் கூட சமாதானம் ஆகியிருப்பேன்.

கூட்டத்தில் திப்பம்பட்டி ஆறுச்சாமி
கூட்டத்தில் திப்பம்பட்டி ஆறுச்சாமி

அங்கு வந்ததில் 60 சதவிகிதம் பேர் பட்டியலின மக்கள். `என்ன அண்ணா உன்னையே மேடை ஏத்தலை.’ என்று கேட்டனர். அது மிகுந்த மன வருத்தம் ஆகிவிட்டது. என்னால் இந்தக் கட்சியை விட்டு எங்கேயும் போக முடியாது.

சாதாரண உறுப்பினராக தொடரலாம் என பதவியில் இருந்து விலகிவிட்டேன். இதுதொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட ஒரே கட்சி திமுகதான்.

கூட்டத்தில் செந்தில் பாலாஜி
கூட்டத்தில் செந்தில் பாலாஜி

தலைவர் குதி என்றால் ஏன் என கேட்காமல் கூட குதித்துவிடுவேன். கட்சிதான் சுயமரியாதையை ஊட்டியது. அது இந்த இயக்கத்திலேயே கிடைக்கவில்லை என்றால், தொண்டன் எங்கே போய் சொல்ல முடியும்.” என்றார் வேதனையுடன்.