Published:Updated:

எஸ்.பி.வேலுமணி வீட்டில், ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட சாவி! - வங்கி லாக்கரில் அதிரடி சோதனை

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். வேலுமணியின் சென்னை, கோவை வீடுகள், வேலுமணி சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர்,

எஸ்.பி. வேலுமணி வீடு
எஸ்.பி. வேலுமணி வீடு
வேலுமணி விவகாரம்: தொடரும் `ரெய்டுகள்’... விசாரணை வளையத்தில் அதிகாரிகள்!

`கே.சி.பி இன்ஜினீயர்ஸ்’ சந்திரபிரகாஷ் என்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தினர். கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியிலுள்ள வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி லாக்கர் சாவி ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில், சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புக்குழு, எஸ்.பி.வேலுமணி கணக்கு வைத்திருக்கும் வங்கியில், அவரின் லாக்கரைத் திறந்து சோதனை நடத்தியிருக்கிறது. மேலும் வங்கி அதிகாரிகளிடம், ``கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது?” உள்ளிட்ட விவரங்களை விசாரித்துள்ளனர்.

வங்கி லாக்கர்
வங்கி லாக்கர்
கோப்புப் படம்

மேலும், வேலுமணி வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களைப் பெற்று சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், லாக்கரிலிருந்து ஆவணங்கள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவா போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆட்சியில் இருந்தால்தான் கோவை மக்கள்மீது அக்கறையா மிஸ்டர் வேலுமணி?

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ``வேலுமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சாவியின் அடிப்படையில் லாக்கரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட புகார், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் சொத்து விவரங்களைக் கணக்கிடும் பணிகள் நடந்துவருகின்றன” என்றனர்.

கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்
கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்

இதற்கிடையே, கோவை தி.மு.க பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத், வேலுமணி மீது வைத்துள்ள புகார் தொடர்பாக, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் 150 பக்க ஆவணங்களை ஒப்படைத்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு