Published:Updated:

`சொகுசு கார் முதல் தண்ணீர் தொட்டி வரை!' - விஜயபாஸ்கர் மாமனார் வீட்டை சல்லடை போட்ட அதிகாரிகள்!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்குச் சம்பந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். விஜயபாஸ்கர், அவரின் மனைவி ரம்யா ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரம்யாவின் தந்தை சுந்தரம் கோவையில் வசித்துவருகிறார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்: சோதனைக்குள்ளாகும் 4-வது முன்னாள் அமைச்சர்! - 43 இடங்களில் ரெய்டு, வழக்கு பதிவு

ராமநாதபுரம் பகுதியிலுள்ள சுந்தரம் வீட்டில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சுந்தரத்தின் வீட்டிலுள்ள நகைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்துவருகின்றன.

மறுபக்கம் சுந்தரத்தின் சொகுசு காரிலுள்ள பொருள்களைக் கைப்பற்றி விசாரித்துவருகின்றனர். அதேபோல, சுந்தரத்தின் வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல, அவிநாசி சாலையிலுள்ள சுந்தரத்தின் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

மொட்டைமாடியில் சோதனை
மொட்டைமாடியில் சோதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி.இன்ஜினீயர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கே.சி.பி.நிறுவனமும் சுந்தரத்தின் அலுவலகமும் அருகருகே உள்ளன. இதனால், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

சுந்தரத்தின் அலுவலகம் உள்ள கட்டடம்
சுந்தரத்தின் அலுவலகம் உள்ள கட்டடம்

சுந்தரத்துக்குச் சொந்தமாக கோவை சிட்டியில் மேலும் சில இடங்கள் உள்ளன. அந்த இடங்களிலும் சோதனை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு