Published:Updated:

`கல்விக்கு முன்னுரிமை; மாணவர்களுக்கு இ-பாஸ்!’ - வலுக்கும் கல்வியாளர்களின் கோரிக்கை

இ பாஸ்
இ பாஸ்

தமிழகத்தில் கல்லூரிகளின் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில், கல்விக்கு முன்னுரிமை கொடுத்து மாணவர்களுக்கு இ பாஸ் வழங்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது தமிழக அரசு. எனினும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இ பாஸ் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது அரசு. திருமணம், துக்க நிகழ்வுகள், மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சை ஆகிய காரணங்களுக்காக மட்டும் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நியாயமான முறையில் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் 90% பேருக்கு நிராகரிப்படுகிறது. அதுவே பணம் பெற்றுக்கொண்டு சிலர் மிக எளிதாக இ பாஸ் வாங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

எனவே தமிழகத்தில் கிட்டதட்ட ஐந்து மாதங்களாக நடைமுறையில் உள்ள இந்த இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மக்கள் தங்கள் வாழ்வாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஊரடங்கு தளர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இ பாஸ் முறையில் தொடக்கத்திலிருந்தே ஊழல் நடைபெற்று வருகிறது எனவே இந்த முறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமும் 70,000 விண்ணப்பங்கள்... 2 மணி நேர டெட் லைன்... எப்படி வழங்கப்படுகிறது இ-பாஸ்?

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவர்களுக்கான கல்லூரிச் சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால் இ பாஸ் கிடைக்காததாதல் வெளியூர்களில் இருக்கும் மாணவர்களால் சென்னையில் இருக்கும் கல்லூரிகளில் சேரமுடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே இ-பாஸ் முறையில் மாணவர்களுக்கான படிப்பு மற்றும் கல்லூரிச் சேர்க்கை தொடர்பாக விஷயங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலந்தாய்வு
கலந்தாய்வு
மாதிரி புகைப்படம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர் ‘ஆனந்தம்’ செல்வகுமார், “சென்னையில் கொரோனா அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அதன் பிறகு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிகள் வெளியாகி தற்போது கல்லூரிச் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கலந்தாய்வுக்காக தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெளியூர் சென்ற மாணவர்கள் சென்னைக்கு வந்தால்தான் சான்றிதழ்களைப் பெற்று பின்னர் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

திருச்சி: `இ-பாஸ் இல்லாமல் வடமாநிலத்தவர்கள் வந்தது எப்படி?!'- ரயில்வே பணிமனைக்கு எதிராகப் போராட்டம்

மாணவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல இ பாஸ் வழங்கப்படாத காரணத்தால், தமிழகத்தின் பல ஊர்களில் சிக்கியிருக்கும் மாணவர்களின் கல்லூரி சேர்க்கை பாதிக்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகள் தரமான கல்லூரிகள் கொண்டுள்ளன. அதனால் பிற ஊர்களிலிருந்து புதிதாக சென்னைக்கு வந்து கல்லூரிகளில் சேர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே ஆன்லைனில் சான்றிதழ் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆனால் சில தனியார் கல்லூரிகள் நேரில் வந்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கச் சொல்கிறார்கள்.

அண்ணா பல்கலைகழகம்
அண்ணா பல்கலைகழகம்

உதாரணத்துக்கு வேலூரில் இருக்கும் ஒரு மாணவர் சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேர அனுமதிகேட்டுள்ளார். 18-ம் தேதிக்குள் உங்கள் சான்றிதழ்களைக் கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கல்லூரி தரப்பில் சொல்கிறார்கள். 18-ம் தேதிக்குள் இ பாஸ் அனுமதி கிடைக்காமல் எப்படி ஒரு மாணவரால் கல்லூரியில் சேர முடியும். இப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரவும், திருச்சி, கோவை போன்ற ஊர்களுக்குச் செல்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. அரசு கலந்தாய்வில் தேர்வாகாத மாணவர்கள் நேரில் கல்லூரி அலுவலகத்துக்குச் சென்றால் தான் சேர்க்கை கிடைக்கும். அதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் படிக்க முடியாமல் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகிறது.

மருத்துவம், சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு எப்படி இ பாஸ் வழங்கப்படுகிறதோ அதேபோல் கல்விக்காகவும் முன்னுரிமை வழங்கி 12-ம் வகுப்பு சான்றிதழை ஆதாரமாகக் காட்டும் மாணவர்களுக்கு இ பாஸ் வழங்கலாம். அதுவும் முடியவில்லையென்றால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்கள் தமிழகத்தின் எந்த மூலைக்கும் பயணிக்கலாம் என்ற உத்தரவை அரசு பிறபிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு