Published:Updated:

ரயில் பயணிகளுக்கான அற்புதமான இதழ் ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ வெளியீடு!

‘யுவர் பிளாட்ஃபார்ம்’ வெளியீடு

இ-டோல் அட்ஸ் மீடியா மற்றும் எர்த் & ஏர் ஆகியவை தெற்கு ரயில்வேயுடன் இணைந்து ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ என்ற முதல் ரயில் ஸ்மார்ட் இதழை வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான அற்புதமான இதழ் ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ வெளியீடு!

இ-டோல் அட்ஸ் மீடியா மற்றும் எர்த் & ஏர் ஆகியவை தெற்கு ரயில்வேயுடன் இணைந்து ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ என்ற முதல் ரயில் ஸ்மார்ட் இதழை வெளியிட்டுள்ளது.

Published:Updated:
‘யுவர் பிளாட்ஃபார்ம்’ வெளியீடு

இ-டோல் அட்ஸ் மீடியா மற்றும் எர்த் & ஏர் ஆகியவை தெற்கு ரயில்வேயுடன் இணைந்து ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ என்ற முதல் ரயில் ஸ்மார்ட் இதழை வெளியிட்டுள்ளது. 30 செப்டம்பர் 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ பயணம், ஃபேஷன் மற்றும் ஓய்வுநேரங்களைச் சிறப்பாக்கும் லைஃப்ஸ்டைல் இதழாகும். ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் வித்தியாசமான ஒன்றைப் படிக்கும் வகையில் பயணிகளை ஊக்குவிப்பதும், புதியதொரு வாசிப்பு அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதும் இதன் நோக்கம். இந்த இதழ் இந்தியாவை மையப்படுத்தி, வாசகர்களின் பயணத்தில் உதவ புதிய மற்றும் தனித்துவமான உள்ளடக்கத்தை அளிக்கிறது.

 ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ வெளியீடு
‘யுவர் பிளாட்ஃபார்ம்’ வெளியீடு

இது ஒரு ஸ்மார்ட் மாத இதழாகும். இது அச்சு மற்றும் டிஜிட்டலுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு QR குறியீடு இருக்கும். அது பயணிகளை டிஜிட்டல் முறையில் பத்திரிகையுடன் இணைக்கவும், உள்ளடக்கத்துக்காகப் பின்தொடரவும் வசதியளிக்கும். உள்ளடக்கத்தில் தெற்கு ரயில்வே மையப்படுத்தப்படும். அனைத்துப் பயணிகளும் டிஜிட்டல் வாசகர்களும் தெற்கு ரயில்வேயின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள இது உதவும். தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள தெற்கு ரயில்வே, இந்தியாவை தண்டவாளங்கள் வழியாக இணைக்கும் ஒரு பொறியியல் அற்புதம். ஒவ்வொரு மாதமும், ரயில்வே பற்றிய நான்கு பக்க படைப்புகள் வெளியிடப்படும். அத்துடன் ரயில்வே சாதனைகள், புதிய வசதிகள் மற்றும் பல அம்சங்களும் விளக்கப்படும்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவம் ஆர்வமும் கொண்ட வி.பிரவீன் குமார், ஷங்கர் எம் ஷிவ் மற்றும் கார்த்திக் பி எஸ் ஆகியோரை இந்த இதழ் நிறுவனர் குழுவாகக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த குழுவும் இணைந்து அற்புதமான உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. . இந்த In-Train இதழின் நோக்கம், அனுபவம், அறிவு மற்றும் பல விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வை பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவது மற்றும் ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ மூலம் விளம்பரதாரர்கள் சிறப்பான இடத்தைப் பெற முடியும். பயணிகளும் பிராண்டுகளும் ஒரே மேடையில் இணைவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் இது ஒரு புதிய ஆரம்பம்! யுவர் பிளாட்ஃபார்ம் முதல் நாளிலிருந்தே தினமும் பன்முகப் பார்வையாளர்களை வழங்குகிறது.ஒவ்வொரு வாசகருக்கும் குறைந்தபட்சம் சராசரியாக 30 நிமிடங்கள் ஈடுபடுத்தும் நேரத்தை வழங்குகிறது.

1 அக்டோபர் 2022 முதல் பின்வரும் ரயில்களில் ‘யுவர் பிளாட்ஃபார்ம்’ இதழைப் படிக்கலாம். • சதாப்தி எக்ஸ்பிரஸ்: சென்னை - மைசூர் • சதாப்தி எக்ஸ்பிரஸ்: சென்னை - கோயம்புத்தூர் • டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்: சென்னை - பெங்களூர் • தேஜஸ் எக்ஸ்பிரஸ்: சென்னை - மதுரை